நீரை வீணாக்கினால் அபராதம்: தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்

தில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், பொறுப்பில்லாமல் தண்ணீரை வீணாக்குவோருக்கு அபராதம் விதிக்க தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.


தில்லியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை குறித்து ஷீலா தீட்சித், எம்எல்ஏக்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தில்லியில் உண்மையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. தண்ணீர் விநியோகித்தலில் குறைபாடு உள்ளது என்றார்.

அதேபோல, தண்ணீரை சிலர் பொறுப்பில்லாமல் கண்டபடி வீணாக்குகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு அபராதம் விதிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார் ஷீலா தீட்சித்.

Source & Thanks : .newindianews

Leave a Reply

Your email address will not be published.