வன்னியில் பணியாற்றிய படை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தூதரகப் பணிகள்

வன்னிக் களமுனைகளில் பணியாற்றிய படைத்துறை கட்டளை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வன்னிக் களமுனைகளில் பணியாற்றிய படைத்துறை கட்டளை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.

பாதுகாப்புத்துறை பிரதம அதிகாரி ஏயர் மார்சல் டொனால்ட் பெரேரா, வான்படை தளபதி ஏயர் சீஃப் மார்சல் றொசான் குணதிலக்க, கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரணகொட ஆகியோருக்கு வெளிநாடுகளில் தூதரகப் பணிகள் வழங்கப்படவுள்ளன.

இது மட்டுமல்லாது டிவிசன் படையணிகளை வழி நடத்திய அதிகாரிகளுக்கும் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

57 ஆவது படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மன் நாட்டிற்கான பிரதி தூதரக நியமனம் பெற்றுள்ளார். படையின் நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மலேசியாவுக்கான பிரதித் தூதுவராக சில மாதங்களுக்கு முன்னர் நியமனம் பெற்றுள்ளார்.

மேலதிக வெற்றிடங்கள் ஏற்படும் போது மேலும் பல களமுனைத் தளபதிகளுக்கு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.