இலங்கை அரசின் செயலுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

இலங்கையில் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நெருக்கடியின் கடைசி வாரங்களில் இருதரப்பினருமே இழைத்த மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து இயங்கிவரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்கிற அமைப்பின் அதிகாரி ஒருவர் இது குறித்து பேசுகையில்,

முன்னைய காலத்தில் இழைக்கப்பட்ட அத்துமீறல்களை விசாரித்து வந்த இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் கலைத்து ரத்து செய்யப்பட்டமை சட்டத்தை நிலைநாட்டுவதில் இலங்கை அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா என்பது பற்றி பல சந்தேகங்களை எழுப்பியிருப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அரசின் மனித உரிமைகள் செயலாளர் ரஜீவ விஜேசிங்கே, நீதி வழங்கப்படல் எப்போதுமே மிகவும் துரிதமாக செய்யப்படக்கூடியது அல்ல, அதற்கு பொறுமை மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் அடிப்படைத் தேவைகள் இன்னமும் அதிக அளவில் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.