கொழும்பில் புலிகளுக்கு அனுப்ப வைத்திருந்த மருந்துப் பொருட்கள் மீட்பு: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதற்கு தயாராகவிருந்ததாக கூறப்படும் 2,494,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்தே, இம்மருந்துப் பொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மருந்து பொருட்களுக்கு உரிமையாளர் என கருதப்படும் ஒருவரும் இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைதானவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவத்துறைப் பொறுப்பாளருடன் தொடர்புடையவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் பல கோடி ரூபாய்களுக்கு அதிகமான பொருட்களை அவர் விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.