யாழ் குடாநாட்டில் இந்தியாவின் புதிய அனல் மின் நிலையம்

யாழ் குடாநாட்டில் புதிய அனல் மின்னிலையம் ஒன்றை சிறீலங்காவும், இந்தியாவும் கூட்டாக நிறுவ இருப்பதாகத் தெரிய வருகின்றது. யாழ் மல்லாகத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் தென் பகுதிக்கு தேவையான மின்சாரம் பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு தற்பொழுது காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையம் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. யாழ் குடாநாட்டின் தற்போதைய மின்சாரத் தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் நிலையில், புதிய அனல் மின் நிலையத்தின் தேவை என்ன என குடாநாட்டுப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறீலங்கா படைகள் கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமித்த பின்னர், திருகோணமலை சம்பூரில் அனல் மின்னிலையம் அமைப்பதற்கு இந்தியாவுடன் சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தது.

சம்பூர் அனல் மின் நிலையம் காரணமாக, அந்தப் பிரதேசங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள், மீளக் குடியேற அனுமதி மறுக்கப்பட்டு, தற்பொழும் தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர்.

Source & Thanks : sankathi

Leave a Reply

Your email address will not be published.