“மனித உரிமை மீறல் விசாரணை தேவை” என்ற நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது; இந்தியாவும் கடும் ஆட்சேபம்

இலங்கையில் வன்னியில் நடைபெற்ற போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் உட்பட மனிதஉரிமை மீறல்கள் குறித்து, முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும், அவசியம் தேவை என்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை….. நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் முன்வைத்த யோசனையை கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.

மனித உரிமைகள் ஆணையாளரின் யோசனையை இந்தியாவும் கடுமையாக ஆட்சேபித்தது.

இந்த விடயத்தில் விவகாரத்தில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிலைப்பாட்டை அவர் விடுத்த கூட்டு அறிக்கையை மீறிச் செயற்பட மனித உரிமைகள் ஆணையாளர் முனைவது கண்டிக்கத்தக்கது என்று இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஏ.கோபிநாதன் கூறினார்.

மோதல்களின்போது அனைத்துத் தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த முழுமையான விசாரணை தேவை என்று மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை நேற்று முன்தினம் கேட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணைகள் தேவை என்று கூறிய அவர், அதற்கான ஐ. நா மனித உரிமை ஆணைக்குழுவின் உதவிகளை தான் ஏற்பாடு செய்வேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், அவரது இந்தக் கோரிக்கையை ஐ.நாவின் இலங்கைக்கான தூதுவர் தயான் ஜயதிலக நிராகரித்திருக்கிறார்.

உலகில் பல பாகங்களில் முன்னைய போர்களின்போது தோல்வியடைந்தவர்களே இப்படியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய தயான் ஜயதிலக, அதேவேளை அரச படையினர், தமது நாட்டு எல்லைக்குள், அதுவும் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிராக மாத்திரமே போரிட்டிருக்கிறார்கள் என்பதால் விசாரணை அவசியமில்லை என்று கூறினார்.

இதேவேளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த வியாழக்கிழமை இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்கு இந்தியா உடனடியாக தனது ஆட்சேபத்தை தெரிவித்தது.

நவநீதம்பிள்ளையின் உரையைத் தொடர்ந்து, மனித உரிமை கவுன்ஸிலில் இடம்பெற்ற பொது விவாதத்தின்போது மனித உரிமை கவுன்ஸிலிற்கான இந்தியப் பிரதிநிதி கோபிநாதன் இந்த ஆட்சேபனையை முன்வைத்தார்.

நவநீதம்பிள்ளை, இலங்கை குறித்த விசேட அமர்வில் இணக்கம் காணப்படாத விடயங்கள் குறித்து கவலை செலுத்தக்கூடாது என இந்தியப் பிரதிநிதி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கை தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற விசேட அமர்வை நவநீதம்பிள்ளை வரவேற்றிருந்தார். அதன் காரணமாக விசேட அமர்வுவின் ஒருமித்த முடிவை அவர் ஏற்றுக்கொண்டார் எனக் கருத இடமுண்டு.

விசேட அமர்வில் இடம்பெற்ற விவாதங்கள் மற்றும் உறுப்பு நாடுகள் பின்பற்றிய நிலைப்பாடுகள் குறித்து அவரும் அவரது அலுவலகமும் நன்கு அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை குறித்த விசேட அமர்வின் முடிவு அரசுகளுக்கு இடையிலான இணக்கப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.

மேலும் சமீபத்தில் இலங்கைக்கு ஐ.நா. செயலாளர் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்ட இருதரப்பு அறிக்கைகளையும் விசேட அமர்வு ஏற்றுக் கொண்டது.

குறிப்பிட்ட இரு தரப்பு அறிக்கையில் ஐ.நா. செயலாளர் வெளியிட்டிருந்த கரிசனைகளை ஏற்று இலங்கை பொறுப்புணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களுக்குத் தீர்வு காண தயார் எனக் குறிப்பிட்டிருந்தது.

இலங்கை குறித்த விசேட அமர்வின் போது ஏற்றுக்கொள்ளப்படாத சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்த நிலைப்பாட்டினை எடுப்பதைவிட விசேட அமர்வின் முடிவில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினை பின்பற்றுவது சிறந்ததே என்றார் கோபிநாதன்.

Source & thanks: tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.