29 வயது அமெ. வாலிபருக்கு 11 மனைவியர்; 21 குழந்தைகள்!

அமெரிக்காவில் 29 வயது வாலிபர் ஒருவர் 11 மனைவியர் மூலம் 21 குழந்தைகள் பெற்று அதிர வைத்துள்ளார்.

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தை சேர்ந்தவர் டெஸ்மாண்ட் ஹாட்செட். தற்போது இவருக்கு 29 வயது தான் ஆகிறது. ஆனால், அதற்குள் இவர் 11 மனைவிகள் மூலம் 21 குழந்தைகள் பெற்றுள்ளார்.

இவருக்கு இரண்டு முறை ஒரே ஆண்டில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இவரது மூத்த குழந்தைக்கு 11 வயதாகிறது. கடைசி குழந்தைக்கு 11 மாதம் மட்டுமே ஆகிறது. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருவதால் இவரால் அனைத்து குழந்தைகளையும் பராமரிக்க முடியவில்லை.

இதையடுத்து அவரது மனைவிகளில் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் தான் இவருக்கு 21 குழந்தைகள் இருக்கும் செய்தி வெளி உலகுக்குத் தெரியவந்தது. இவரை அமெரிக்க பத்திரிகைகள் ‘சாதனையாளர்’ என கிண்டலடித்து வருகின்றன.

இந்நிலையில் நீதிமன்றம் அவரது சம்பளத்தில் பாதியை குழந்தைகளுக்கு செலவிட உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெஸ்மாண்டின் சம்பளம் மிகவும் குறைவு என்பதால் ஒரு குழந்தைக்கு சுமார் ரூ. 100க்கும் குறைவாக மட்டுமே கிடைக்கும் எனத் தெரிகிறது.

இதையடுத்து மாநில அரசு தலையிட்டு அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என டெஸ்மாண்டின் வக்கீல் கெய்த் போப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து டெஸ்மாண்ட் கூறுகையில்,

“நான் சாதனை எதையும் படைக்க விரும்பவில்லை. ஆனால் இனி குழந்தை பெற்று கொள்ள மாட்டேன். நான் வேண்டுமென்றோ எவரையும் ஏமாற்றவோ இப்படிச் செய்யவில்லை. எனது எல்லா மனைவியருக்கும் எனக்கு மேலும் சில குழந்தைகள் இருப்பது தெரியும்.

எனது 21 குழந்தைகளின் பெயர், வயது மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றை என்னால் மறக்காமல் சொல்ல முடியும்” என்கிறார் பெருமை பொங்க. இருக்காதா..? 29 வயதில் 21 குழந்தைகள் என்றால்…

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Your email address will not be published.