சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்-த தே கூ

இலங்கை இராணுவத்திடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர்.

நாட்டில் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்று கூற முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரான இரா சம்பந்தர் கருத்து வெளியிட்டுள்ளார்.

போர் முடிவடைந்துள்ள நிலையில் அந்த அமைப்பின் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கி அதன் மூலமாக அவர்களை சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப வழி செய்வது ஒரு தேவை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கையின் தென் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜே வி பி அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்ட கலவரங்களின் போது அதில் ஈடுபட்டவர்களுக்கு இவ்வாறான பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

அரசாங்கத்திடம் தமது அமைப்பால் கோரிக்கைதான் வைக்க முடியுமே தவிர எந்த முடிவையும் திணிக்க முடியாது என்றும் கூறும் சம்பந்தர், அரசும் நியாயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் கோருகிறார்.

அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.