தலிபான்களை கிட்டதட்ட ஒழித்து விட்டோம் – பாகிஸ்தான்

பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தலிபான்களை ஒழிக்கும் பணியை இன்னும் ஒரிரு நாட்களில் இராணுவம் முடித்து விடும் என தான் எதிர்ப்பார்ப்பதாக பாகிஸ்தானின் பாதுகாப்புச்செயலர் சையது அத்தர் அலி தெரிவித்துள்ளார்.

இன்னும் ஐந்து முதல் பத்து சதவீதப் பணியே மீதம் இருப்பதாகவும், தற்போது இராணுவத்தினர் தலிபான் தலைவர்களை குறிவைப்பதாக, சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

எனினும் பாகிஸ்தான் இராணுவத்தினர் எச்சரிக்கையாக கருத்து வெளியிடுவதாகவும், இந்த பகுதியில் தலிபான்களின் கிளர்ச்சி இன்னும் பல வாரங்களுக்கு இருக்கலாம் எனவும் பாகிஸ்தானில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.