பொட்டு அம்மான் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது: சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானை படையினர் கைது செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானதென இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


பொட்டு அம்மானும் அவரது உதவியாளரான கபில் அம்மானும் கொல்லப்படவில்லை எனவும், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர்களை உயிருடன் கைது செய்திருந்தால் பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் பொட்டு அம்மானின் உடல் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.