போரின் இறுதிகட்டத்தில் வெளியேறிவர்களில் பலர் காணவில்லை

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில், அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின் இறுதிக் காலகட்டத்தில், இருதரப்பிலிருந்தும் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகியதாக தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.


புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து பலர் வெளியேறி வந்த போது, பல குடும்பங்கள் சிதறுண்டு போனதாகவும், அப்படி பிரிந்தவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

போரின் போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் சமயம் சோதனைச் சாவடிகளில் வைத்து பல இளைஞர்கள் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களின் நிலை குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்றும் வவுனியாப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்றிருந்த பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

போர் நடைபெற்ற காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அதிகப்படியான காலம் பதுங்கு குழிகளிலேயே வாழ்ந்து வந்ததாகவும் அவர்கள் எமது செய்தியாளரிடம் கூறினர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.