பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த நாட்டை மீண்டும் பிளவடைய அனுமதிக்க முடியாது: ஜனாதிபதி.

முழு உலகையும் எமக்கு எதிராக திருப்ப பலரும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போதிலும், பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டை மீண்டும் பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் படைவீரர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத ஓர் சூழ்நிலை உருவாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவித்தது போல் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல வேலைத்திட்டம் ஒன்றிற்கு செல்லவேண்டும்.

அத்துடன் மோசடிகளிலிருந்தும் வீண்விரயங்களிலிருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரத்தையும் நாட்டில் முடிவுக்கு கொண்டுவந்து எதிர்கால சந்ததியினர்க்கு சிறந்த நாடொன்றை, சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.