இந்திய அரசு, தமிழ் மக்களுக்கு எதிரான போக்கை உடனடியாக கைவிட வேண்டும்: திருமாவளவன்

இந்திய அரசு தமிழ் மக்களுக்கு எதிரான விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, கியூபா மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அது உள்நாட்டு பிரச்சினை என்று கூறி இலங்கை அரசுக்கு பொருளாதார உதவிகள் செய்ய அனைத்துலக நாடுகளை வலியுறுத்துகின்றன.

குறிப்பாக இந்திய அரசு இலங்கைக்கு உதவுவதில் மிகத் தீவிரமாக உள்ளதை அறிய முடிகிறது. இந்திய அரசின் இத்தகைய போக்கு ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இந்திய அரசின் இந்த தமிழ் இன விரோத போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகுந்த வேதனையோடு மிக வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்திய அரசு தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையை கைவிட வேண்டுமெனவும் இலங்கைக்கு உதவக்கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்

Source & Thanks : sankathi

Leave a Reply

Your email address will not be published.