இலங்கைகான நிதியுதவிகளை கட்டுப்படுத்துமாறு அமெரிக்க செனட் சபை கோரிக்கை

இலங்கைக்கான நிதியுதவிகளை கட்டுப்படுத்துமாறு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சில வகையிலான நிதி உதவிகளை தடுத்து நிறுத்துமாறு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் திகதியுடன் முடிவடையும் நிதியாண்டின் பின்னர் இலங்கைக்கான இந்த பொருளாதார கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படும் வரையில் இந்த நடைமுறையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளின் போது இலங்கையின் மனிதாபிமான நிலவரம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

Source & Thanks :tamilwin

Leave a Reply

Your email address will not be published.