பிரபாகரன் சுட்டுக் கொலை-இலங்கை அறிவிப்பு

வன்னி: விடுதலைப் புலிகளின் தலைவர்[^] பிரபாகரன்[^] இன்று வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம்[^] அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை ஏ.எப்.பி, ராய்ட்டர்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துளளன.

இன்று காலை பிரபாகரன்[^] , பொட்டு அம்மான், சூசை ஆகியோரை சுற்றி வளைத்த ராணுவம்[^] பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், அவரது உடல் மீட்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது.

பொட்டு அம்மான்-சூசையும் சுட்டுக் கொலை:

அதே போல புலிகளின் உளவுப் பிரிவு தலைவர்[^] பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம்[^] கூறியுள்ளது.

டிஎன்ஏ சோதனைக்குப் பின் உறுதி செய்வோம்..

இது குறித்து ராணுவ செய்தியாளர் உதய நயணகாரா கூறுகையில், நாங்கள் இப்போது எதையும் உறுதிப்படுத்த விரும்பவில்லை. உடல்களை கைப்பற்றியுள்ளோம். டி.என்.ஏ சோதனைகள் நடக்க வேண்டியுள்ளது. அதன் பின்னரே எதுவும் கூற முடியும் என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.