உலங்கு வானூர்தி உள்ளிட்ட இராணுவத் தளவாடங்களை அரசாங்கம் ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு

உலங்கு வானூர்தி உள்ளிட்ட இராணுவத் தளவாடங்களை இலங்கை அரசாங்கம் ரஸ்யாவிடமிருந்து விரைவில் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது. சலுகைக் கடன் அடிப்படையில் இந்த இராணுவத் தளவாடங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவுடனான இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடையும் படைவீரர்களை வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

எனினும் எவ்வாறான இராணுவ தளவாடங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன என்பது குறித்த தகவல்களை பாதுகாப்புச் செயலாளர் வெளியிடவில்லை.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.