எந்தவொரு சர்வதேச அழுத்தத்திற்கும் அடிபணியப் போவதில்லை – ரோஹித்த போகொல்லாகம

எந்தவொரு சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்து கொள்கைகளை அசராங்கம் மாற்றிக் கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தோருக்கு நட்டஈடு வழங்கும் வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் சுதேச கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகங்களினது நல் அபிப்பிராயத்தை வென்றெடுக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதுவராலயங்கள் அரிய பணியாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த சில சர்வதேச சக்திகள் முயற்சி மேற்கொள்வதாகவும் ஒருபோதும் இந்த முயற்சி வெற்றியளிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.