அதிமுகவுடன் காங்கிரஸ் இணையும் சாத்தியம் : டில்லி வட்டாரங்கள் தெரிவிப்பு

மக்களவை தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றன. காங்கிரஸ், பா.ஜ., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன.

பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும், அதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விரைவில் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று காங்கிரஸ் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருவதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “அதிமுக மதவாத கட்சியல்ல” என்று கூறியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Your email address will not be published.