முள்ளிவாய்க்காலில் சிக்குண்டுள்ள மக்களுக்கு எந்த மனிதாபிமான நிறுவனமும் உதவமுடியாத சூழ்நிலை: விவரிக்கிறார் செஞ்சிலுவை அதிகாரி

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இப்போதுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலையில், அங்கு சிக்குண்டுள்ள மக்களுக்கு எந்த மனிதாபிமான நிறுவனமும் உதவமுடியாது. பாவம் மக்கள், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தமக்குத் தெரிந்த வழிமுறைகளை கைக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். என செஞ்சிலுவைச் சர்வதேச குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் தலைமையகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் பியரி கரஹன் புஹுல் மேலும் கூறுகையில்,

முள்ளிவாய்க்காலில் சிக்குண்டுள்ள மக்களுக்கு என உணவுப் பொருள்களைத் தமது கப்பலில் எடுத்துச் சென்றபோதிலும், அவற்றை கரை சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து மூன்று நாள்கள் திரும்பிச் செல்லநேர்ந்தது

மற்றும் அதனால் போரில் காய மடைந்தவர்களையும் மற்றும்நேயாளர்க ளையும் திருகோணமலைக்கு ஏற்றிச் செல்ல முடியாத தமது நிறுவனத்தின் இயலாமை குறித்தும் நேற்று விளக்கமளித்த போதே கரஹன் புஹுல் மேற்கண்டவாறு கவலையுடன் தெரிவித்தார்.

அங்குள்ள நிலைமை குறித்து அவர் பின்வருமாறு விவரித்தார்:

பாதுகாப்புக் குறித்து நிரம்பவே உறுதியளிக்கப்பட்ட போதிலும், தரைப் பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதால் கடற்போக்குவரத்து தடைப்பட நேர்ந்தது.

ஆகக் கடைசியாக இம்மாதம் 9 ஆம் திகதி உணவு மற்றும் மருந்துப் பொருள்களை கப்பலில் கொண்டு சென்று இறக்கிவிட்டு காயமுற்றவர்களையும் நேயாளர்களையும் ஏற்றி வந்தோம்.

உலக உணவு திட்டத்தின் 500 மெ.தொன் உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் முல்லைத்தீவு துறையிலேயே தரித்து நிற்கிறது.

அங்குள்ள எமது பணியாளர்கள் கற்பனையும் செய்ய முடியாத அளவிலான மனிதாபிமானப் பேரவலத்தைக் காண நேர்ந்துள்ளது. எந்த மனிதாபிமான தொண்டு நிறுவனமும் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியாத பாதகமான பாதுகாப்புச் சூழலே உருவாகி உள்ளது.

சண்டை தணிந்தபாடில்லை. குறுகிய நிலப்பரப்பில் சிக்குண்டுள்ள மக்கள் தமது கைகளாலேயே பதுங்கு குழிகளைத் தோண்டி அவற்றுக்குள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் குடி தண்ணீருக்கும் உணவுக்கும் பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு எமது பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பும் தடைப்படாத போக்குவரத்து வசதியும் தேவை.

இப்போதைய நிலைமை சீரடைந்ததும் எமது பணியாளர்கள் மக்களுக்கு தொண்டாற்ற ஆயத்தமாக உள்ளனர் என்றார் கரஹன் புஹுல்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.