ராகிங் ஒழிப்பு: மாநிலங்களுக்கு தனிகுழு – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: ராகிங்கை ஒழிக்க மாநிலங்களுக்கும் தனிகுழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்ரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாண்டு படித்த வந்த அமான் சத்யா காசூ என்ற மாணவன் ராகிங் கொடுமையால் பலியானான்.

இது தொடர்பாக அவனது பெற்றோர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தனர். இதனை இன்று(08ம் தேதி) சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. விசாரணையின் முடிவில், ராகிங்கை தடுக்க மாநிலங்களுக்கு தனிகுழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்படும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மாநில அரசின் பொறுப்பு என்றும் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதுதவிர, பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.