‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (07.05.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சோதனை நடை பெறும் இடங்களில் .நா. பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படுவதால் அங்கே மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது என இலங்கைக்கான .நா. வதிவிடப் பேச்சாளரான கோடன் வைஸ் தெரிவிக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“அநேகமானோர் எந்தவித சிக்கல்களும் இன்றியே சோதனைச் சாவடிகளைக் கடந்து வருகின்றார்கள் .சிலர் தாம் விடுதலைப் புலிகள் என ஒப்புக் கொள்கின்றார்கள் .இன்னும் சிலர் விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.அவர்கள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறைச்சாலைகளுக்க அனுப்பவதாகவே நாம் அறிகின்றோம்.”

என இது தொடர்பாக தெரிவித்துள்ள அவரிடம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்துக் கேட்ட போது,

“இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் அறிந்திருக்கின்றோம்.அதற்கு மேல் அது பற்றி எமக்கு எதுவும்தெரியாது .வவுனியா முகாமில் ஏற்கத்தக்க நிலைக்கும் குறைவான எண்ணிக்கையினரே அங்குள்ளனர்.மெனிக் பார்ம் – 02 இல் பெண்கள் குளிக்கும் இடங்களில் 30 பெண்களை நியமிக்கப் போவதாக அரசாங்கம் கூறியுள்ளது.இப்படிச் செய்யும் போது இதனை ஒப்பீட்டளவில் தவிர்க்க முடியும்.

இதனைத் தவிர பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து புகார் செய்வதற்கு ஒரு புகார் மையத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் .அது இராணுவ கட்டுப்பாட்டிற்கு அப்பால்பட்டதாக இருக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு நாம் யோசனை முன் வைத்துள்ளோம். இதன் மூலமே எவ்வித அச்சமுமின்றி பாதிக்கப்பட்டவர்கள் தமது புகார்களை தெரிவிக்க முடியும் .அரசும் இப்படியான நடைமுறையை அமுல்படுத்த முயற்சிப்பதாக நாம் அறிகின்றோம் .அதே நேரத்தில் இவை எல்லாம் குற்றச்சாட்டுக்கள் தான்.

இம் முகாம்களில் 2 லட்சம் பேர் வரை இருக்கின்றார்கள.இது இலங்கையிலுள்ள நடுத்தர நகரமொன்றின் மக்கள் தொகை .எனவே இது போன்ற நகரத்தில் நடக்கும் குற்றச்சமபவங்கள் இங்கும் நடக்கலாம் என நாம் எதிர்பார்க்கலாம்.நிச்சயமாக பாலியல் புகார்ளை நாம் நியாயபப்டுத்தவில்லை .அதே நேரத்தில் மிகப் பெரிய அளவில் பாலியல் துஷ்பிரயோகம் நடை பெற்றதாக எமக்கு ஆதாரங்களும் இல்லை.” என இதற்கு பதிலளித்தார் இலங்கைக்கான .நா .வின் அலுவலக வதிவிடப் பேச்சாளர்கோடன் வைஸ்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்வது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த வாழும் கலை நிறுவனத்தின் தலைவர் சிறீ சிறீ ரவிசங்கர் குருஜியுடன் எந்தவிதமான பேச்சுக்களையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் எந்தவித பேச்சுக்களையும் நடத்துவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் அரசாங்க வட்டாரங்கள், இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை உருவாக்குவதற்கு வாழும் கலை நிறுவனம் முற்படக்கூடாது எனவும் எச்சரித்திருக்கின்றது.
கடந்த மாதத்தில் கொழும்பு வந்த சிறீ சிறீ ரவிசங்கர், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியதாகத் தெரிவித்திருக்கும் இந்த வட்டாரங்கள், இருந்தபோதிலும் போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தான் தயாராகவில்லை என்ற செய்தியை இந்தச் சந்திப்பின் போது அரச தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்தாகவும் குறிப்பிடுகின்றன.
இந்த வார தொடக்கத்தில் ரவிசங்கருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சிறிலங்கா அரச படைகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அனுசரணையை வழங்குமாறு அழைப்பு விடுத்திருந்தமை கவனி்கத்தக்கது.
இதனைத் தொடர்ந்தே இந்த விடயம் தொடர்பாக ரவிசங்கர் சிறிலங்கா அரசுடன் தொடர்புகொண்டு போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுக்களை நடத்துவார் என வாழும் கலை நிறுவன வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையிலேயே போர் நிறுத்தம் தொடர்பாக ரவிசங்கருடன் பேச்சுக்களை நடத்தப்போவதில்லை என சிறிலங்கா அரசு இப்போது திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் நண்பர்களான 4 இளைஞர்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரே சமயத்தில் இந்நால்வரும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

தாண்டவன்வெளி எல்லை வீதியைச் சேர்ந்த யோகேந்திரன் யோசான்(வயது 20) சேற்றுக்குடாவைச் சேர்ந்த மகேசன் பேர்னாட்(வயது22) ,ஜயந்திபுரத்தைச் சேர்ந்த தவராசா ஹரிமுகுந்தன் ( வயது 20 ) மற்றும் மாமாங்கததைச் சேர்ந்த பெர்னான்டோ பிரசாந்த (வயது20) ஆகியோரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நால்வர் தொடர்பாக தங்களால் மேற்கொள்ளபடப்ட விசாரணைகளின் போது இவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வவுணதீவு பிரதேசத்திலுள்ள கரையாக்கன்தீவில் 27 வயதான கூலித் தொழிலாளி கிருபைராசா ரமணன் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்தவேளை வெள்ளை வானில் வந்ததாகக் கூறப்படும் நபர்களினால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,அவரைப் பற்றிய தகவல்களை அறிய முடியாதிருப்பதாக உறவினர்களினால் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்டப்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நோர்வேயின் பீப்பல்ஸ் எயிட் நிறுவனம் இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளது . இந்த தன்னார்வ தொண்டர் அமைப்பு நேற்று இலங்கையில் வெளியேறியுள்ளது.

பீப்பல்ஸ் எயிட் நிறுவனம் விடுதலைப்புலிகளுக்கு 36 வாகனங்களை வழங்கியுள்ளதாக அரசாங்க தரப்புச் குற்றம்சுமத்தியிருந்தது. அத்துடன் விடுதலைப்புலிகளின் பதுங்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் மூலம் இந்த அமைப்பு புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில்பாதுகாப்பு வலயம்எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால், பாரிய உயிரிழப்புக்கள் அந்தப் பகுதியில் இடம்பெறலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்றது .
எனவே இந்த அனர்த்த்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவையும், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியையும் நேற்று புதன்கிழமை தனித்தனியாக கொழும்பில் சந்தித்தபோது அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பிரித்தானிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிறவுண் தலைமையிலான குழுவையும், ஐரோப்பிய ஒன்றிய வதிவிடப் பிரதிநிதியையும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது, வன்னி போர் நிலை மற்றும் வவுனியா முகாம்களில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக விரிவான முறையில் எடுத்துக் கூறினார்கள்.
இது தொடர்பாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா பின்வருமாறு தெரிவித்தார்:
“வன்னிப் பேரவலம் இன்று அனைத்துலக மயப்படுத்தப்பட்டுவிட்டது. முழு உலகமும் இந்த விடயத்தில் அக்கறை கொள்கின்ற போதிலும், எவருடைய பேச்சையும் கருத்திற்கொள்ள சிறிலங்கா அரசு தயாராகவில்லை. அது நடைமுறையில் அனைவரும் பார்க்கும் விடயம். பெருமளவு உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் இந்தப் போரை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறிலங்கா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
மிகவும் சிறிய ஒரு பகுதிக்குள் பெருமளவு மக்கள் அடைக்கப்பட்டுள்ள நிலைமையில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என அனைத்துலக சமூகம் கேட்டுக்கொண்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை . இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
போரினால் மட்டுமன்றி பட்டினியினாலும் மக்கள் மரணமடையும் நிலை இன்று உருவாகியிருக்கின்றது . உணவுப் பொருட்களோ அல்லது மருந்துப்பொருட்களோ அந்தப் பகுதிக்கு அனுப்பப்படுவதில்லை. போர் தொடர்ந்துகொண்டிருப்பதால் இவற்றை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் கொண்டுசெல்ல முடியவில்லை .
போர் நடைபெறும் பகுதிக்குள் என்ன நடைபெறுகின்றது என்பது எவருக்குமே தெரியவில்லை. .நா. சபையோ அல்லது மனிதாபிமான அமைப்புக்களோ அந்தப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் நாளாந்தம் இறப்பவர்களின் பட்டியலில் பட்டினியால் பலியானவர்களின் விபரங்கள் தெரியவருவதில்லை.
இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தலால் அங்குள்ள போர் நிலைமை சற்று தளர்ந்திருப்பது போன்றதொரு தோற்றப்பாடு உருவாகியிருக்கின்றது. அங்கு தேர்தல் முடிவடைந்தவுடன் தாக்குதல் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடையலாம் என நாம் பேரச்சம் அடைந்திருக்கின்றோம். தேர்தலுக்குப் பின்னர் அங்கு பாரிய தாக்குதல் ஒன்றை அரசாங்கம் நடத்தவிருப்பதாக எமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது .
இதனால் அங்கு பாரிய இழப்புக்களை மக்கள் சந்திக்க வேண்டியேற்படும். அரசாங்கப்படையினர் பயன்படுத்தும் ஆயுத வகைகள் குறித்தும் பல தகவல்கள் வெளியாவதால் குறுகிய நிலப்பரப்புக்குள் வசிக்கும் பெருந்தொகையான மக்களைப் பாதுகாக்க அனைத்துலகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு தெரிவித்த மாவை சேனாதிராஜா, வவுனியாவில் உள்ள அகதி முகாம்களின் நிலைமைகள் தொடர்பாகவும் அவற்றைப் பார்வையிடுவதற்குத் தமக்கு அனுமதி வழங்கப்படாமை பற்றியும் எடுத்துக் கூறினார். இவை அனைத்தையும் கவனமாக அவதானித்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக தாம் லண்டன் திரும்பியதும் விரிவாக ஆராய்வதாகத் தெரிவித்துள்ளனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

புத்தர் பெருமான் அவதரித்த நாளான வெசாக் நாளினை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமையும் , நாளை மறுநாள் சனிக்கிழமையும் சிறிலங்காவில் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில் , இந்த நாட்களில் தென்பகுதியில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தலைநகர் கொழும்பில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் ஒன்றும் இன்று தொடக்கம் ஒரு வார காலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இற்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் பெருமளவு காவல்துறையினரும், படையினரும் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
வெசாக் பண்டிகை நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் எந்தவொரு பகுதியிலாவது தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அச்சம் வெளியிடடுள்ள பாதுகாப்பு அமைச்சு , பொதுமக்கள் அனைவரும் இதனையிட்டு மிகவும் வழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றது.
“வடபகுதிப் போரில் பின்னடைவை எதிர்நோக்கியிருக்கும் விடுதலைப் புலிகள், நாட்டின் எந்தப் பகுதியிலும் தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் பொதுமக்கள் இந்தப் பண்டிகைக் காலப்பகுதியில் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்” என தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பாரிய அளவிலான வெளிச்சக் கூடுகளும், மின்சார அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பார்வையிடுவதற்காக பெரும் தொகையான மக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து தலைநகருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு ஆயுதப் படையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள். கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்களை முழுமையாகச் சோதனையிட்ட பின்னரே அனுமதிப்பதற்கும் ஆயுதப் படையினர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கடத்தப்பட்ட தனது கணவரை மீட்டுக்கொடுக்க லஞ்சமாக 150,000 வழங்குமாறு கடத்தப்பட்டவரின் மனைவியிடம் கோரிக்கை விடுத்த உயர் காவல்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதிகளில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன குறித்த நபரைக் கண்டு பிடித்துக் கொடுப்பதற்கே இந்த லஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது.

சிலாபம் காவல்துறைப் பிரிவின் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான உயர் காவல்துறை அதிகாரியே இவ்வாறு லஞ்சம் கோரியுள்ளார்.

சிலாபம் தபால் நிலையத்தில் வைத்து லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் போது கையும் களவுமாக குறித்த உயர் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் .
கடத்தப்பட்டவரை கண்டு பிடித்துக் கொடுக்க மொத்தமாக 500,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளது .

ஏற்கனவே 350,000 ரூபா பணத்தை குறித்த பெண் காவல்துறை அதிகாரிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினால் குறித்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதாகவும், அவரை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது .

!!!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாண சபை உறுப்பினரான வெள்ளைத்தம்பி அமீர்தீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினராக இவர் தெரிவானார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிலிருந்து விலகி அண்மையில் தேசிய காங்கிரஸில் இணைந்திருந்தார்.

இவரது இராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு விருப்பத் தெரிவு வாக்கு அடிப்படையில் 7914 வாக்குகளைப் பெற்றிருந்த காத்தான்குடி நகர சபைத் தலைவரான யு.எல்.எம் . முபீன் பதவி ஏற்கவிருக்கின்றார்.

தனது நியமனம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்பு தான் பதவி ஏற்கவிருப்பதாக யு.எல்.எம். முபீன் தெரிவித்தார் .

இதேவேளை கிழக்கு மாகாண சபைக்கு ஆளும் கட்சிக்குரிய போனஸ் ஆசன வெற்றிடமொன்று இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கின்றது. தற்போது லண்டனில் வசிக்கும் ஓய்வு பெற்ற மட்டக்களப்பு அரசாங்க அதிபர் .மௌனகுருசாமி இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பதவி ஏற்காத காரணத்தினால் அது வெற்றிடமாக உள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் இடம்பெறுகின்ற யுத்தம் மற்றும் அதில் பலியான மக்களின் தொகை என்பவை தொடர்பில் ஏன் தகவல்களை பெறமுடியவில்லை என ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பாலஸ்தீன காஸா பிரதேசத்தில் இவ்வாறான தகவல்கள் வெளியான போதும் இலங்கையில் மாத்திரம் இவ்வாறான நிலை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்பட்டுள்ளதென இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன்pடம் கேள்வி எழுப்பினர்.

எனினும் பான் கீ மூன் அந்த கேள்விக்கு நேரடி பதில் எதனையும் வழங்கவில்லை.

பான் கீ மூனின் இந்தசெயற்பாடு இன்னும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதாக தமிழ் தரப்புகள் சந்தேகிக்கின்றன.

அத்துடன் இந்த நகர்வுக்கு பின்னால் இந்தியாவின் அழுத்தம் உள்ளதாகவும் அந்த தரப்புகள் சந்தேகிக்கின்றன.

இதேவேளை தாம் இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடி இடம்பெயர்ந்தவர்களின் நிலை மக்களை பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீட்பது மற்றும் அவர்களுக்கான உணவு நிலை என்பவை தொடர்பில் பேசியதாக பான் கீ மூன் குறிப்பிட்டார்.

மனிதாபிமான பணியாளர்களை பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதிக்கவேண்டும் என்ற வலியுறுத்தலை தாம் விடுத்ததாகவும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபை விரைவில் இலங்கையின் உண்மை நிலையை அறிந்துவர மற்றும் ஒரு விசேட பிரதிநிதியை அனுப்பவேண்டும் என இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் கோரினர். ஏற்கனவே அனுப்பப்பட்ட விஜய் நம்பியார் தமது பயண விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

அத்துடன் அவர் இந்திய முன்னாள் இராணுவ அதிகாரியான சதீஸ் நம்பியாரின் சகோதரரரும் இலங்கை அரசாங்கத்தின் உள்ள மூன்று சகோதரர்களின் நம்பிக்கையை கொண்டவருமாவார்.

இந்தநிலையில் அவருக்கு பதிலாக மற்றும் ஒருவரை அனுப்பி நிலைமையை ஆராயவேண்டும் என இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யுத்த வலயத்தில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்களின் உயிரிழப்புக்கள் உயர்வடையக் கூடும் என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அமெரிக்கப் பிரதிநிதி சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்படுவதாக இரண்டு தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

கொழும்பு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி வன்னியில் ஆட்டிலறித் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான குழுவினர் யுத்த வலயத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கூர்ந்து கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்துவதாகவும் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் நம்பகத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென சூசன் ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு நாம் விடுத்த கோரிக்கையை மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அப்பாவி பொதுமக்களை பார்வையிட சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் பூரண அனுமதியளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவீடன் வெளிவிவகார அமைச்சரது வீஸா நிராகரிக்கப்பட்டமை அதிருப்தியளிப்பதாக சூசன் ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏனெனில், பாராளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சென்று தனிநாட்டு கோரிக்கைக்கான பிரச்சாரங்களில் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிங்கத்திற்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குமாறு அந்தக் கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறில் விடுத்த வேண்டுகோளை அடுத்து தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறைமைக்கு எதிராக செயற்பட்டுவரும் ஓர் பாராளுமன்ற உறுப்பினருக்கு விடுமுறை வழங்குவது பொருத்தமானதாக அமையுமா என அவர் அவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் நியாயமான உரிமைகளை நசுக்கவில்லை எனவும், எனினும் இவ்வாறான வரப்பிரசாதங்களை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் துஸ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இம்முறை மூன்றுமாத கால விடுமுறையை அனுமதிப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் அவரது செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுத்த வலயத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்னத்திற்கும் விடுமுறை வழங்க பாராளுமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிரேஸ்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தின் ஆக்கங்கள் சிங்கள மக்களுக்கு எதிரான வகையில் அமையப்பெறவில்லை என நீதிமன்றில் சாட்சியமளித்த மனித உரிமை ஆர்வலரான வை.கே டி சில்வா தெரிவித்துள்ளார்.

திஸ்ஸநாயகத்தின் கட்டுரைகள் இன முறுகலைத் தூண்டும் வகையில் அமையப் பெற்றதென்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார் .

சுனாமி அர்னத்தம் இடம்பெற்ற நேரத்தில் ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகம் நிவாரணப் பொருள் விநியோகம் குறித்து நேரில் சென்று ஆராய்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வாகரைப் பகுதிக்குச் சென்று நிவாரணப் பொருள் விநியோகம் தொடர்பில் அப்பிரதேச மக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இனவாதத்தை தூண்டும் வகையிலோ அல்லது சிங்கள மக்களை எதிரான இன குரோதத்தை தூண்டும் வகையிலான படைப்புக்களையோ அவர் பிரசூரிக்கவில்லை என சாட்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திஸ்ஸ நாயகத்துடன் பதிப்பக உரிமையாளர் ஜசீதரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தின் நீண்ட கால தடுத்து வைப்பு குறித்து அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால தீவிர யுத்த முனைப்புக்களில் இந்திய அரசாங்கத்திற்கு உடன்பாடில்லை என முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் புதல்வர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெருக்கெடுத்து ஓடும் இரத்த வெள்ளத்தை தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு எனவும், இலங்கைத் தமிழர்கள் அப்பாவிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் சிக்கியிருக்கும் பிரதேசங்களில் இலங்கை அராசங்கம் மேற்கொண்டு ஆக்கிரமிப்புக்களுக்கு இந்திய கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் சகோதரி பிரியாங்காவும் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார் .

இலங்கை வாழ் அப்பாவி தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படுவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நா.. ஸ்ரீகாந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் தலையீடுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஸ்ரீகாந்தா தொடர்ந்து பேசியதாவது :-
வன்னிப் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள ஒன்றரை இலட்சம் மக்களினது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது . அங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையால் அவர்கள் அனைவரும் எவ்வேளையிலும் கொல்லப்படலாமென குறிப்பிட்டார்.
இந்த அரசுக்கு போரை நடத்துவதற்கு வெளிநாட்டுப் பணம் தேவை. இந்திய அரசின் ஆயுத உதவிகள் தேவை. ஆனால் அவர்களின் அறிவுரைகள் தேவையில்லை. சர்வதேச சமூகத்தைப் பகைத்துக்கொண்டு உள்நாட்டில் ஆட்டம போட நினைத்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு விரைவில் உணர்த்தும்.
வன்னியில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் உள்ளனர். இவர்களின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இவர்கள் எவ்வேளையிலும் விமான,எறிகணைத் தாக்குதல்களால் கொல்லப்படலாம்.
ஆனால் அரசோ தனது இராணுவ நடவடிக்கையை மனிதாபிமான நடவடிக்கையெனக் கூறுகின்றது. தயவுசெய்து அந்தச்சொல்லைப் பயன்படுத்தி அந்தச் சொல்லுக்குள்ள புனிதத்தை கெடுத்துவிட வேண்டாம். வன்னியில் அரசு சிங்கள இளைஞர்களை பலியிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்மக்களை படுகொலை செய்கிறது . புலிகளும் கொல்லப்படுகிறார்கள். எதிர்கால சந்ததி அழிந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் அரசியல் தீர்வு காண இன்னும் நேரம் கடந்து விடவில்லை. இப்போதும் நாமும் புலிகளும் தயாராகவே உள்ளோம். இந்த அரசு தமிழரின் தேசிய எழுச்சியை அடக்கிவிட்டோம் என்ற உணர்வை சிங்கள மத்தியில் ஊட்டுகிறது. இது அதிக காலம் நீடிக்காது. பொருளாதார நெருக்கடியை சிங்களமக்கள் உணரும்போது தெளிவடைவார்கள்.
பிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
தமிழ்மக்கள் இப்போது கூட சிங்கள மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டுகின்றனர். அவர்கள் ஒரு நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர். இந்த எண்ணத்தை தக்கவைப்பது சிங்கள மக்களினதும் அரசினதும் கைகளில்தான் உள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கு வருமாறு விடுத்த அழைப்பை ஐக்கிய நாடுகளின் செயலாளர் பரிசீலிப்பார் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்கு தமது பயணம் உதவும் என அவர் நினைத்தால் இது தொடர்பில் நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

எனினும் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர் காலநிலவரங்கள் அவதானிக்கப்பட்டு வருதாக குறிப்பிட்டார் .

இதேவேளை இலங்கைப் போரில் உயிழந்த மக்களின் ஒளிப்படம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிப்பதற்கு பேச்சாளர் மறுத்து விட்டார்.

எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கையின் மனிதாபிமான பணிகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை பான் கீ மூன் தெளிவாக தெரிவித்தாக பேச்சாளர் குறிப்பிட்டார்.

வன்னி கட்டுபாடற்ற பிரதேசத்திலிருந்து இதுவரை 1 லட்சத்து 92 ஆயிரம் மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான இணைப்புக்காரியாலம் தெரிவித்துள்ளது.

இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 255 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஆயிரத்து 739 பேர் காயமடைந்த நிலையில் வைத்திசாலைகளில் சிகிட்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் நேற்று சுமார் 30 மெட்றிக்தொன் உணவுப்பொருட்கள் பாதுகாப்பு வலய பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதில் குழந்தைகளுக்கான உணவுகளும் அடங்குகின்றன .

அத்துடன் உலக உணவுத் திட்டத்தின் நிவாரணப் பொருட்களும் இதில் அடங்குகின்றன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரான்ஸ் பாரிஸ் நகரத்தில் உள்ள சீனத் தூதுவராலயம் முன்பாக நேற்று பி. பகல் 2மணியளவில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றிருந்தது. இந் நிகழ்விலஆயிரக் கணக்கான மக்கள் பெரும் எணர் வெழுச்சியுடன் பங்கெடுத்துக் கொண்டனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உடனடியுத்த நிறுத்தம்,யுத்தம் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களுக்கு மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து டுசில்டோவ் மாநிலப் பாராளுமன்றத்திற்கு முன்பாக கிரி,ராகுல் ஆகியோரால் தொடங்கப்பட்ட பட்டினிப்போராட்டம் 5வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
,d;W khiy 5 kzpastpy; spd fl;rpapd; Kf;fpa gpuKfh; fye;Jnfhs;s ,Ug;gjhy; ngUksT kf;fs; fye;Jnfhs;SkhW Vw;ghl;lhsh;fs; Ntz;Lfpwhh;fs;.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரான்சில் 31 நாட்களாக தமிழினப்படுகொலைகளுக்கு எதிராகவும், நிரந்தரமான உடனடிப்போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மக்கள் எழுச்சிப்போராட்டம் நடைபெற்று வரும் அதேவேளை 29 நாட்களாக உண்ணா நிலைப்போராட்டமும் நடைபெற்று வருகிறது
தாயகத்தில் குழந்தைகள் அடங்கலாக பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் சிறிலங்காப்படைகளால் படுகொலைசெய்யப்பட்டுகொண்டிருக்கையில் , மக்களைக்காப்பாற்றுவதற்காக செல்வகுமார், நவநீதன் ஆகியோர் தொடர்ந்தும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார்கள்
எனவே தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரான்சு அரசாங்கம் உடனடிக்கவனத்தில் எடுத்து, அவர்களின் உணர்வுகளை மதித்து காத்திரமான பதிலைத்தருமாறு பிரான்ஸ் வாழ் தமிழ் சமூகம் கேட்டு நிற்கிறது
தற்போது றீப்பப்ளிக் பகுதில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உண்ணா நிலைப்போராட்டத்திற்கு தொடற்சியாக மக்களை வருகைதருமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுகொண்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!
இலங்கையில் வாழும் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தைப் பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினரின் பொய்ப் பிரசாரத்தை நம்பாமல், 40 தொகுதிகளிலும் திமுககாங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவமனையில் தாம் நலமாக உள்ளதாகக் கூறியுள்ள அவர், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி அபாயகரமான முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சையில் பிழைத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதும் இரண்டாம் கண்டத்தில் இருந்து பிழைத்து மருத்துவமனையில் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், பொய்ப் பிரசாரத்தை நம்பாமல் வெற்றியை மட்டும் மனதில் கொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

காஷ்மீர் உட்பட 8 மாநிலங்களில் உள்ள 85 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் துவங்கியுள்ளது.

மக்களவைக்கு இதுவரை நடந்த 3 கட்டத் வாக்குப்பதிவில் 372 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று 4வது கட்டமாக 85 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இன்றைய தேர்தலில் 9.46 கோடி மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக 1.29 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பா... தலைவர் ராஜ்நாத் சிங் காஷியாபாத் தொகுதியிலும், மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜாங்கிப்பூர் தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் மெயின்புரி தொகுதியிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் பாட்னாவிலும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியிலும் இன்று நடக்கும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு நடக்கும் 85 தொகுதிகளில் மொத்தம் 1,315 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 119 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

ராஜஸ்தான் (25 தொகுதிகள்), ஹரியானா (10), புதுடெல்லி (7) ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாகவும், பீகாரில் உள்ள 3 தொகுதிகள், ஜம்முகாஷ்மீரில் ஒரு தொகுதி, பஞ்சாப்பில் 4 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 18 தொகுதிகள், மேற்குவங்கத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தேர்தலில் வாக்களித்தால் தனது தயாரிப்பானலூயி பிலிப்பிராண்ட ஆடைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என மதுரா கோட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
தேர்தலில் நடுத்தர மற்றும் மேல்வர்க்க மக்கள் வாக்களிப்பதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மதுரா கோட்ஸ் நிறுவனம், தேர்தலில் வாக்களித்தால் தனது தயாரிப்பான லூயி பிலிப்பிராண்ட ஆடைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது .
வாக்களித்ததற்கான அடையாளத்துடன் (ஆள்காட்டி விரலில்மை‘) வந்தால் சலுகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!
தொகுதி வேட்பாளர்கள் யாரும் பிடிக்கவில்லை என்ற முடிவுக்கு வரும் வாக்காளர்கள் வாக்குக் சாவடிக்குச் சென்று ஓட்டுபோடாமல் இருக்க தனக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையை பயன்படுத்தலாம் .
இதற்கான 49-0 எனும் பாரத்தை வாக்குச்சாவடிகளில் வாங்கி அதை நிரப்பி வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும்.
வாக்களிக்காமல் இருக்கும் உரிமையை சட்டம் வாக்காளர்களுக்கு வழங்குகிறது. ஆனால் அந்த உரிமையை பதிவு செய்யும் வசதி வாக்குப் பதிவு எந்திரத்தில் இல்லை. எனவே 49-0 பாரத்தை கேட்டுப் பெறவேண்டும் என தில்லி தலைமை தேர்தல் அதிகாரி ஜே .கே.சர்மா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தொகுதி வேட்பாளர்கள் மீது அதிருப்தி என்றால் அதற்காக வீட்டிலேயே தங்கிவிட வேண்டாம். வாக்களிக்காமல் இருக்கவும் நமக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை பயன்படுத்திக்கொள்ள பாரம் 49-0 நிரப்பிக் கொடுக்கவேண்டும். இத்தகைய பாரத்தை வாக்காளர்கள் கேட்டால் கொடுக்கும்படி சாவடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். தில்லியில் இந்த தேர்தலில் எத்தனை பேர் இந்த பாரத்தை கேட்கிறார்கள் என்பது பற்றிய விவரத்தை திரட்ட திட்டமிட்டுள்ளோம்.
1961ம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதியின்படி வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள் அதை பதிவு செய்யலாம். அவர்கள் கருத்து பாரம் 17ஏ-ல் பதிவு செய்யப்பட்டு அதில் வாக்காளர்களின் கையெழுத்து அல்லது விரல் ரேகை பெறப்படும்.
வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் எண்ணிக்கையானது வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் அடுத்த இடத்தை பிடித்த வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தாலும் தேர்தல் செல்லாததாக ஆகாது என்றார் சர்மா.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

புதுதில்லி: மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் புதியக் கட்சிகளின் ஆதரவுக்காக தற்போதைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை எந்த வகையிலும் இழக்கமாட்டோம் என காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் செவ்வாயன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி, தேர்தலுக்குப் பின் நிதீஷ் குமார் மற்றும் ஜெயலலிதா போன்றவர்களின் ஆதரவை பெற காங்கிரஸ் முயற்சி மேற்கொள்ளும் என குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்தி கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ராகுலின் பேட்டிக்கு விளக்கம் அளிக்கும் வகையில் , காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஸ்வின் குமார், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியமைக்கும் என்றும், ஆட்சியமைப்பதற்காக தேர்தலுக்கு பிறகு புதியக் கட்சிகளின் ஆதரவை பெற தற்போதைய கூட்டணிக் கட்சிகளை கண்டிப்பாக இழக்க மாட்டோம் என்றும் கூறினார் .

இதே கருத்தை சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தும் கூறினார்.

தேர்தலுக்கு பிறகு அதிமுகவையும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியதாக அவரது பேட்டி திரித்து கூறப்பட்டுள்ளதாக ஆசாத் கூறினார்.

தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அஜ்மல் கசாப் மற்றும் 47 பேருக்கு எதிராக 86 குற்றச்சாற்றுகளை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எல். தகிலியானி இன்று பதிவு செய்தார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 170 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த கசாப் மட்டுமே பிடிபட்டார் . அவருக்கு உதவியதாகக் கூறி பஹீம் அன்சாரி, சகாபுதீன் அகமது ஷேக் ஆகிய இருவரையும் மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கசாப் உட்பட 3 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாற்றுகளை நீதிபதி, அவர்களிடம் கூறினார். இந்த வழக்கில் இவர்கள் தவிர 35 குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர்.

குற்றம்சாற்றப்பட்டவர்களுக்கு எதிராக மொத்தம் 86 குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டதாக நீதிபதி கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பிஜேபியின் பிரதமர் வேட்பாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி இன்று சென்னை வருகிறார். மாலையில் சைதாப்பேட்டையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு வட சென்னை மற்றும் தென் சென்னை பிஜேபி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழகம், புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வரும் ஞாயிற்றுக்கிழமை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அகற்றப்படவில்லை . தீவுத் திடல் பகுதி முழுவதும் போலீஸôரின் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புதுச்சேரியில் சோனியாவின் பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் திடீரென புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந் நிலையில், மக்களவைக்கான 5-வது இறுதிக் கட்டத் தேர்தல் பிரசாரம் 11-ம் தேதி திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது.
இந் நிலையில், காங்கிரஸ்திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சோனியாவின் சென்னை வருகையை கட்சியினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, சென்னைக்கு சோனியா காந்தி 9 அல்லது 10-ம் தேதி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதையடுத்து, தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத மேடை மற்றும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் அகற்றப்படவில்லை. ஆயுதம் தாங்கிய போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவுத் திடலைச் சுற்றி, இரவு ரோந்து செல்லவும் போலீஸôருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
???????????????????????
நேபாளத்தில் தற்போது எழுந்துள்ளது உள்நாட்டுப் பிரச்னை. இதில் எந்த ஒரு வெளிநாடும் மூக்கை நுழைப்பதை எங்கள் கட்சி சகித்துக் கொள்ளாது என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரசண்டா புதன்கிழமை தெரிவித்தார்.
ராணுவத் தலைமை தளபதி விவகாரத்தால் பதவியை ராஜிநாமா செய்த பின்னர், முதன்முறையாக புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போது பிரசண்டா, இவ்வாறு தெரிவித்தார்.
மாவோயிஸ்ட்டுகள் மீது நம்பிக்கை ஏற்படும் சூழல் உருவாகும். அமையவுள்ள புதிய அரசுக்கு மீண்டும் நாங்களே தலைமை ஏற்போம் என்றும் பிரசண்டா திட்டவட்டமாகக் கூறினார்.
தாங்கள் பதவியை ராஜிநாமா செய்த போது இந்தியாவை விமர்சித்ததாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, நான் இந்தியாவையோ, அமெரிக்காவையோ அல்லது சீனாவையோ குறிப்பிட்டு பேசவில்லை . எங்களது உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டு தலையீட்டுக்குத்தான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்றார்.
ராணுவத் தலைமை தளபதி விவகாரத்தில் இந்தியா நேர்மறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று தங்களது நாட்டு மக்கள் நினைப்பதாகவும் பிரசண்டா தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் இந்த வார முற்பகுதியில் அமெரிக்கா தலைமையிலான படையினர் நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள் கண்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறார்களின் சடலங்களும் இதில் அடங்கும்.
இந்தத் தாக்குதல்களில் நூறு பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று பரா பிராந்தியத்தின் உள்ளூர் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இறப்புகள் குறித்து அமெரிக்க மற்றும் ஆப்கான் இராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் இறந்திருப்பது தொடர்பில் அமெரிக்க நிர்வாகம் ஆழ்ந்த கவலை கொள்வதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹில்லரி கிளிண்டன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதை வரவேற்பதாக ஆப்கானின் அதிபர் ஹமித் கர்சாய் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் அறுபதுக்கும் மேற்பட்ட தாலிபான்களை தாம் கொன்றுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.
ஸ்வாட் மற்றும் புனேர் பகுதிகளில் உள்ள தாலிபான் இலக்குகள் மீது உலங்கு வானூர்தி மற்றும் பீரங்கி மூலம் அரச படைகள் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது.
கிளர்சியாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ள மரகத சுரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டதாக அரசு கூறுகிறது. எனினும் இது சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்தப் பகுதியில் இராணுவம் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
ஸ்வாட் பள்ளத்தாக்கு குறித்து தாலிபான்களுடன் ஏற்பட்ட உடன்பாடு முறிந்தால் அதன் காரணமாக வெளியேறுகின்ற மக்களின் எண்ணிக்கை 5 லட்சம் வரை உயரக் கூடும் என்று அரசு எச்சரித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro =153.81sl / 65.65in
1us $ = 115.80sl / 49.42in
1 swiss fr = 101.87 sl / 43.48in
1 uk pound = 175.24 sl / 74.81in
1 saudi riyal =30.87sl /13.18in

Leave a Reply

Your email address will not be published.