வன்னி மக்களுக்கு உணவுகளை போடும் பொறுப்பை அமெரிக்கா முன்னெடுக்கவேண்டும்: வன்னி சுகாதார அதிகாரிகள் கோரிக்கை

மனிதாபிமானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்டு என்றால் தற்போதாவது, தாமதிக்காது வன்னி மக்களுக்கு நேரத்தை வீணாக்காமல், உணவுப்பொதிகளை போடவேண்டும் என வன்னியில் உள்ள சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயத்தில் அமெரிக்கா முன்னின்று செயற்படவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

வன்னியில் உள்ள மனிதபிமான பிரச்சினைகளை உணர்ந்து அமெரிக்காவும் உலக நாடுகளும் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அந்த கோரிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.

இலங்கை படை விமானங்கள், நேற்று பாதுகாப்பு வலயத்தில் பல தடவைகளாக குண்டுகளை போட்டு பலரை கொன்றுள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்குழல் பீரங்கி தாக்குதல்களினால், பலர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் காயமடைந்த பொதுமக்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும் தாக்குதலிற்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவை பற்றிய முழுமையான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் காயங்களுக்கு உள்ளானவர்களை ஏற்றிச் செல்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் நேற்று வரும் எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் அது வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் யுத்தத்திற்கு உதவிவரும் இந்தியா, இந்த மேமாதம் நடுப்பகுதிக்குள் இலங்கையின் யுத்தத்தில் முக்கிய கட்டம் ஒன்றை அடைவதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தி வருவதாக வன்னி தரப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதில் ஒரு கட்டமே மக்களை பட்டினியில் வாடவைப்பது என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.