யுத்த நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தவில்லை: கோத்தபாய ராஜபக்ஷ

இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ளுமாறோ, அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புகளை இடைநிறுத்துமாறோ, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே. நாராயணன் மற்றும் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தம்மிடம் வலியுறுத்தவில்லை என, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய வெளியுறவுச் செயலரும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். இதன் போது அவர்கள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையடினர்.

எனினும் இச்சந்திப்பின் போது, ‘யுத்த நிறுத்தம் குறித்து வலியுறுத்தவில்லை என” பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர்கள் மோதல் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் தொடர்பில் கவலை வெளியிட மட்டுமே செய்தனர்” என கோத்தபாய வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.