‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (01.05.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

இராணுவ செய்திகளை வழங்கும் இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான army.lk வலையமைப்பிலிருந்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார் . முரண்பாட்டாளர்களால் துண்டிக்கப்பட்ட இந்த இணையத்தளம் விரைவில் மீள்பதிவு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு வலய பகுதிக்கு ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு குழுவொன்றை அனுப்புவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 5வது முறையாக கொண்டு வரப்பட்ட யோசனை சீனாவின் கடும் எதிர்ப்பு காரணமாக தோல்வியடைந்துள்ளது.

இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை என சீனா தெரிவித்துள்ளது. இந்த யோசனை சமர்ப்பிக்கப்படும் முன்னர், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் , ஐநாவின் அவசர மனிதாபிமான உதவிகளுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ், ஐநா செயலாளர் பான்‐கீ‐ மூன் மற்றும் ஐநாவின் இராணுவ அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இலங்கையின் சமாதான அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வேயை இலங்கை அரசாங்கம் அந்த பணியில் இருந்து நீக்கியுள்ள நிலையில் எரிக் சொல்ஹெய்ம் அமெரிக்காவுக்கு சென்று ஐநா பொதுச் செயலாளரை சந்தித்துள்ளார். எரிக் சொல்ஹெய்ம் ரகசியமாக இந்த விஜயத்தை மேற்கொண்டதாகவும் இது குறித்து நோர்வேயின் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தாகவும் சிங்கள நாளிதழ் ஒன்;று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலய பகுதியில் இடம்பெறும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என சொல்ஹெய்ம், ஐநா செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது . இதேவேளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தலைமை பொறுப்பை இன்று முதல் ரஷ்யா ஏற்கவுள்ளது. இதன் காரணமாக இலங்கை தொடர்பான பிரச்சினைகளை பாதுகாப்புச் சபையில் எழுப்ப முடியாது போகும் எனவும் அந்த சிங்கள நாளிதழ் மேலும் கூறியுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரையோரப் பகுதிக்குள் நுழைவதற்கான கடல் மற்றும் தரைமார்க்க நகர்வுகளை சிறிலங்கா படையினர் கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக மேற்கொண்டுவருகின்ற போதிலும் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படைநகர்வு தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளையில் இந்த முன்நகர்வைத் தடுத்துநிறுத்துவதற்காக விடுதலைப் புலிகள் ஏழு கரும்புலித் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல்களில் படையினருக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பாக தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு படைத் தரப்பு விரும்பவில்லை எனத் தெரிகின்றது.
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி ஊடாக பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் நேருக்கு நேர் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருக்கும் பாரிய மண் அணையைத் தாண்டிச் செல்லமுடியாத நிலையில் படையினர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் இடம்பெற்ற கடும் சமர் மற்றும் மண் அணையைத் தாண்டிச்செல்ல முடியாத நிலை என்பன காரணமாக படையினரின் முன்நகர்வு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதியில் ஒரு தரையிறக்கத்தை மேற்கொண்டு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி முன்நகரும் அதேவேளையில் வெள்ளமுள்ளிவாய்க்காலின் தென்பகுதியில் உள்ள வட்டுவாகல் பகுதியில் இருந்து உள்ளே நுழைவதற்கான பாரிய தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணி மேற்கொண்டுள்ளது.
இப்படையணிதான் விடுதலைப் புலிகளின் பாரிய மணல் அணையைத் தாண்டிச் செல்ல முடியாது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இதேவேளையில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணி அம்பலவன்பொக்கனையின் தென்பகுதியில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இப்படையணி 8 ஆவது சிறப்புப் படையணியின் கொமாண்டோக்களுடன் இணைந்து கரைய முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இப்பகுதியிலும் விடுதலைப் புலிகள் பாரிய மண் அணை ஒன்றை அமைத்திருப்பதுடன் கடுமையான எதிர்த் தாக்குதலையும் தொடுத்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது ஆறு கிலோ மீற்றர் நீளமான நிலப்பரப்பு மட்டுமே இருப்பதாக நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் மீது நேற்று முன்நாள் நான்கு தற்கொலைத் தாக்குதல்களைக் கரும்புலிகள் நடத்தியுள்ளனர்.
58 ஆவது படையணியினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான தாக்குதல்களை எதிர்பார்த்து படையினர் மேற்கொண்டிருந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கரையமுள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நேற்று முன்நாள் படையினர் பாரிய நகர்வு ஒன்றை மேற்கொண்ட போது கடும் சமர் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது .
இப்பகுதியில் விடுதலைப் புலிகள் பெருமளவு கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
இரட்டைவாய்க்காலின் தென்பகுதியில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள 58 ஆவது படையணி நேற்று தமது முன்நகர்வு நடவடிக்கையை மீண்டும் மேற்கொண்டனர்.
ஏப்ரல் 28 ஆம் நாளுக்குப்பின்னர் விடுதலைப் புலிகள் ஆறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு சந்தர்ப்பங்களில் அவர்கள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் வந்து அவற்றை வெடிக்கவைத்துள்ளனர்.
இருந்தபோதிலும் இத்தாக்குதல்களின் போது படையினருக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இராணுவத் தரப்பினரால் வெளியிடப்படவில்லை.
இதேவேளையில் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் கடல்வழியாகத் தப்பிச் சென்றுவிடலாம் என்பதால் சிறிலங்கா கடற்படையினர் முல்லைத்தீவு கடற்பகுதியில் முழு அளவிலான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவுக் கடற்பகுதியில் நான்கு பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு கடற்படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கும் அதேவேளையில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளையும் கடற்படையினர் தீவிரப்படுத்தியிருக்கின்றனர் .
இப்பகுதியில் கடற்படையினருடைய பெருமளவு கதுவீகள், டோரா படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கதுவீகள் மூலமாக கடல் மற்றும் தரைப் பகுதிகளின் நடமாட்டத்தை கடற்படையினர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் வெளியே இருந்து அவர்களுக்கு உதவிகள் வருவதைத் தடுப்பதற்காகவுமே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச அலுவலகத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்த 3 சிறுவர்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இவர்கள் மூவரும் சர்வோதய பண்ணையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை காத்தான்குடி பொலிஸ் சிறுவர் ,பெண்கள் பிரிவு இவ் அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது 18 வயதுக்கும் குறைந்த 3 சிறுவர்கள் அங்கே தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கரடியனாற்றைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுரேந்திரன் ,கல்லடியைச் சேர்ந்த பரசுராமன் மயூரன் ,மற்றும் அன்புவழிபுரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் டிசாந்தன் ஆகியோரே மேற்படி சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது . மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் இச்சிறுவர்களும் சந்தேக நபரான குறிப்பிட்ட அலுவலகப் பொறுப்பாளரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் வரை சத்துருக்கொண்டான் சர்வோதயப் பண்ணையில் தங்க வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள சிறிலங்கா, இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைப் புலிகளின் கொடிகளை பயன்படுத்துவதற்குக் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது .
ஊடகவியலாளர்களிடம் இந்தத் தகவல்களை நேற்று வியாழக்கிழமை தெரிவித்த சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன, அல் குவைதா அமைப்பின் ஆதரவாளர்கள் இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்தால் மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நேற்று முன்நாள் கொழும்பு சென்றிருந்த பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கும் தான் இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதாகவும் பாலித கோகன்ன குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது :
“இது தொடர்பாக நாம் சுட்டிக்காட்டியதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட், லண்டனில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மக்களுக்குள்ள ஒரு ஜனநாயக உரிமையாகும். ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்களின் போது தூதரக கட்டடங்கள் ஏதாவது தாக்குதலுக்குள்ளானால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கடந்த வாரத்தில் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதையும் மிலிபான்ட் சுட்டிக்காட்டினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த நாடுகளில் ஒரு தடைசெய்யப்பட் அமைப்பாக இருக்கின்றது . அந்த நிலையில் அதற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல அல் குவைதா அமைப்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டால் மேற்குலக நாடுகள் அதனை சகித்துக்கொள்ளுமா என பிரித்தானிய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் இது தொடர்பாக மேற்படி இரு நாடுகளிடமும் தொடர்ந்து நாம் கேள்வி எழுப்புவோம். தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகளையும் அவர்கள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்எனவும் பாலித கோகன்ன தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையின் யுத்த நிலைமைகள் அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உத்தியோபூர்வமாக விவாதிக்க வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கில் நடைபெறும் யுத்த மோதல்கள் காரணமாக பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் இது சர்வதேச ரீதியில் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் மிலிபேண்ட் சர்வதேச ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வலய பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும் அங்கிருந்து இடம்பெயரும் மக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகளையும் சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில், பிரித்தானியா, அமெரிக்கா , பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நிரந்தர அங்கத்துவ நாடுகளாக உள்ளதுடன் 2009 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை கொஸ்டரீக்கா, லிபியா, வியட்நாம், ஒஸ்ரியா , ஜப்பான், மெக்சிகோ, துருக்கி, உகண்;;;டா, பர்கினாபாசோ, குரேசியா ஆகியவை சுழற்சி முறை அங்கத்துவ நாடுகளாக உள்ளன. எனினும் பாதுகாப்புச் சபையின் வெட்டு வாக்கு அதிகாரம் ( வீட்டோ பவர்) நிரந்தர உறுப்பு நாடுகளுக்கே உள்ளன.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பாண்ட் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் ஓர் செயலாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திலிருந்து வெளியும் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கும் தமக்கும் இடையில் நடைபெற்ற சந்தப்பு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு இடை நடுவில் தேவையற்ற வகையில் அழுத்தத்தை பிரயோகிக்க மில்பாண்ட் முனைப்பு காட்டியதாக கோதபாய குற்றம் சுமத்தியுள்ளார் .

ஜனாதிபதியின் நடவடிக்கைகளை இந்த நாட்டு மக்கள் அங்கீகரித்துள்ளதாகவும், சர்வதேச சக்திகளின் கருத்துக்கள் முக்கியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குலக நாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களை திருப்தி படுத்தும் நோக்கில் ஐரோப்பிய தலைவர்கள் தேவையற்ற வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

தமிழ்ப் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பதென்பதனை படையினர் நன்கு புரிந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியல் தலைவர்களையும், பொதுமக்களையும் படுகொலை செய்த போது இந்த டேவிட் மில்பண்ட் என்ற உறங்கிக் கொண்டு இருந்தாரா என கோதபாய கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே ஐரோப்பிய இராஜதந்திரிகள் இலங்கைக்கு விரைவதாகவும் , தமிழ் மக்கள் மீதான கரிசனை எதுவும் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதாக பி.பி.சீயை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சர் மில்பாண்ட் வெளியிட்ட கருத்தின் காரணமாக கோதபாய ராஜபக்ஷவிற்கும் மில்பாண்டிட்ற்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது .

பி.பி.சீ உலக சேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் பிரச்சாரம் செய்து வருவதாக கோதபாய குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பாண்ட், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பிரணர்ட் குச்னெர் மற்றும் ஜீ‐ 8 நாடுகளது அமைச்சர்கள் உள்ளிட்டோர் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் காட்டும் கரிசனை வெறும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், மக்கள் தொடர்பான உண்மையான கரிசனை எதுவுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி சூசன் றைஸ் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேரவையின் சகலரும் கவனம் செலுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பாரிய மனிதாபிமானப் பேரவலம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

யுத்த முன்நகர்வுகளின் காரணமாக பொதுமக்கள் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக பதிவாவதாக நம்பகத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு வீஸா மறுக்கப்பட்டமை கவலையளிப்பதாக சூசன் றைஸ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், அரசாங்கப் படையினர் தொடர்ச்சியாக பொதுமக்கள் வலயங்கள் மீது கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
போரின் போது கனரக ஆயுதங்களைப் பாவிப்பதா இல்லையா என்பதை இராணுவத் தளபதியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., இந்த விடயத்தில் அரசாங்கம் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது எனவும் கடுமையாகத் தெரிவித்திருக்கின்றது .
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்துலக அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை என அரசாங்கம் கூறுவதாகத் தெரிவித்த அநுரகுமார, ஆனால், போரின் போது கனரக ஆயுதங்களைப் பாவிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்திருப்பதற்குக் காரணம் அனைத்துலக அழுத்தங்களே எனத் தெரிவித்தார்.
கனரக ஆயுதங்களைப் போரின் போது பயனப்படுத்துவதா இல்லையா என்ற எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுத்துவிட முடியாது எனவும் சுட்டிக்காட்டிய அநுரகுமார, இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியவர் இராணுவத் தளபதி மட்டும்தான் எனவும் குறிப்பிட்டார் .
போரில் வெற்றி பெறுவதற்கான இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அரசு கூறுகின்றது. உண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரையும் அதன் உறுப்பினர்கள் அனைவரையும் அழிப்பதன் மூலமாக மட்டுமே இந்தப் போரில் அரசாங்கத்தால் வெற்றிபெற முடியும். நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதால் மட்டும் போரில் வென்றுவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தலைவரையும் உறுப்பினர்களையும் அழிப்பதற்கு அரசாங்கம் தவறினால் அவர்கள் கெரில்லா போர் முறைக்குச் சென்றுவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையின் பாதுகாப்புக்கு எதிராக செயற்பட்டதாக கூறி, யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி ஜேம்ஸ் எல்டரை அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது.

நிவாரண பணியாளராக இலங்கை சென்ற இந்த பிரதிநிதி, அடிக்கடி வவுனியாவுக்கு சென்று இலங்கை தொடர்பாக தவறான அறிக்கைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக புலனாய்வு துறையினரால் பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்தே அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ..

இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்ட அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த 6 பேர் அரசாங்கத்தினால் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!
வடபகுதியில் தொடரும் போர் காரணமாக உடமைகளை இழந்து படகுகள் மூலம் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்களின் படகு ஒன்று நடுக்கடவில் கவிழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் . மேலும் 10 பேர் ஆந்திர மாநில கரையோரப் பகுதியில் மீட்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா கடற்கரைப் பகுதியில் இந்தப் படகு நேற்று முன்நாள் புதன்கிழமை நள்ளிரவு 12:00 மணியளவில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடையாளம் தெரியாத படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கரையொதுங்குவதைக் கண்டவர்கள் அதனையும் அதில் இருந்த 10 பேரையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 10 பேருக்கும் கொத்தப்பல்லி தொடக்க சுகாதார நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் மூவரது நிலை மோசமானதாக இருந்ததால் அவர்கள் காக்கிநாடா அரசினர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்டவர்கள் தகவல் தருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கியிருந்த தாம் அங்கு தொடரும் போரின் காரணமாக தொடர்ந்தும் இருக்க முடியாத நிலையில் இரண்டு படகுகளில் 19 நாட்களுக்கு முன்னர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அங்கிருந்து புறப்பட்டதாகத் தெரிவித்தனர் .
இரண்டு படகுகளில் தாம் புறப்பட்டதாகவும் ஒரு படகில் ஒன்பது பேரும் மற்றைய படகில் 10 பேரும் இருந்ததாகவும் நடுக்கடலில் திசை தெரியாமல் தாம் பல நாட்களாகத் தத்தளித்ததாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடும் காற்று வீசியதால் ஒன்பது பேர் பயணம் செய்த படகு நடுக்கடலில் மூழ்கியதில் அதில் இருந்த அனைவரும் பலியாகியுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஆறு பேர் பெண்கள் எனவும் இருவர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது .
மற்றைய படகும் திக்குத் திசை தெரியாமல் சுற்றித் திரிந்த பின்னர் அதில் இருந்த 10 பேருடன் இறுதியாக நேற்று முன்நான் நள்ளிரவில் ஆந்திர மாநிலக் கரையை அடைந்தது.
!!!!!!!!!!!!!!!!!!

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குள் வெளியாரை அனுமதிப்பதில்லை என பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நலன்புரி நிலையங்களுக்குச் செல்ல வெளியாருக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இடைநிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை அரசாங்கமும் படையினரும் இணைந்து மேற்கொண்டு வரும் நிலையில், முகாம்களுக்குள் வெளியாட்கள் செல்வதால், அதற்கு பெரும் தடையேற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இதனால் நலன்புரி நிலையங்களுக்குள் செல்ல அனுமதி கோர வேண்டாம் என தன்னாவர்வ அமைப்புகள் மற்றும் நபர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை, ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதி படம் பிடித்துள்ளது.
அரசாங்கத்தின் பொது மக்கள் மீதான அகோரத்தாக்குதல் இதன் மூலம் ஊர்ஜிதமாவதாக இன்னர் சிட்டி செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் உள்ள எந்த கட்டிடத்திற்கும், கூரைகள் இல்லை. இதன் மூலம், அரசாங்கத்தின் குண்டுத்தாக்குதல்களுக்கு கட்டிடங்கள் அனைத்தும் சேதமாகியுள்ளமை உறுதியாகிறது.

மோதல் தவிர்ப்பு வலயத்தின் மீது அரசாங்கம் மேற்கோண்ட அகோத தாக்குதல்களுக்கு ஏற்கனவே பல சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கத்தினால் சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஆரம்பத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு விஸா வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது .

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது .

இந்த மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள போதிலும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் பில்ட் விஜயம் செய்ய மாட்டார் என அவரது ஊடகச் செயலாளர் இரானா பொசிக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுவீடன் அமைச்சருக்கு வீஸா அனுமதி மறுக்கப்படவில்லை எனவும், அவரது விஜயத்தை ஒத்தி வைக்குமாறு கோரியதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டின் மீது எனக்கு இல்லாத அளவு அக்கறை வெள்ளைக்காரர்களுக்கு எங்கிருந்து வந்ததென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஆயுதங்களை களைந்து, சரணடைய இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சந்தர்ப்பம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

15000 சதுர கிலோ மீற்றர் வரையில் வியாபித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பை தற்போது ஐந்து சதுர கிலோ மீற்றர் வரையில் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
படையினரும், பொதுமக்களும் யுத்த வலயத்தில் இருப்பதனால் விமான மற்றும் ஆட்லறித் தாக்குல்களை நடத்த வேண்டாமென பணிப்புரை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சர்வதேச சக்திகளுக்கும் அடி பணிந்து தாம் கன ரக ஆயுத பாவனையை நிறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஆதரித்த உலகத் தலைவர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலேயே உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரேமதாஸ, ராஜீவ் காந்தி போன்றவர்களை இதற்கு உதாரணமாக காட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த சூழ்நிலை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு வரைவில் தலையீடு செய்யக் கூடுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டாலும், ஈழக் கோரிக்கை தொடரக் கூடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டமைப்பு ஆட்சியே ஈழக் கோரிக்கையை பலப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சில தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வந்ததாகவும், தற்போது பெருந்தொகையான தமிழர்கள் ஈழக் கோரிக்கையை நியாயப்படுத்தும் முனைப்புக்களில் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய ஆட்சியாளர்கள் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இது மதிநுட்பமான செயலாக கருதப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தர்களையும் , பௌத்த பிக்குகளையும் படுகொலை செய்த கருணா போன்றோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமை கட்சியின் துரதிஸ்டமே என அவர் தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
த‌மி‌ழ் ம‌‌ண்‌ணி‌ல் இரு‌க்கு‌ம் வரை இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் யாரு‌ம் அக‌திக‌ள் அ‌ல்ல எ‌ன்று கூ‌றிய இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன், அவ‌ர்களு‌க்காக நா‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து போரா‌டுவோ‌ம் எ‌ன்றா‌ர்
இல‌ங்கை‌யி‌ல் போ‌ர்நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட வ‌லியுறு‌த்‌தி ம‌க்க‌ள் உ‌ரிமை கூ‌ட்டமை‌ப்பு சா‌ர்‌பி‌ல் த‌மி‌ழ்நாடுவா‌ழ் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் ஒரு நா‌ள் அடையாள உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌ம் செ‌ன்னை‌யி‌ல் நடைபெ‌ற்றது.

இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன், த‌மி‌ழ் ஆ‌‌ர்வல‌ர்க‌ள்தியாகு, புகழே‌ந்‌தி , ‌த‌ங்கராஜா, ‌தி‌ரு‌ச்‌சி வேலு‌ச்சா‌மி, ‌விடுதலை ராஜே‌ந்‌திர‌ன், வை‌த்‌திய‌லி‌ங்க‌ம், ‌க‌விஞ‌ர் தாமரை உ‌ள்பட ஏராளமானோ‌ர் கல‌ந்து கொ‌ண்டு உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌த்தை ஆத‌ரி‌த்து பே‌சின‌ர்.

இ‌ப்போரா‌‌ட்டத்‌தி‌ன் முடி‌வி‌ல் த‌மி‌ழ்நாடுவா‌ழ் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் சா‌ர்‌பி‌ல் இல‌‌‌ங்கை‌யி‌ல்நிர‌‌ந்‌தர போ‌ர்நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் , பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்ட ம‌க்களு‌க்கு தேவையான உத‌விகளை வழ‌ங்க ச‌ர்வதேச அமை‌ப்புகளை இல‌ங்கை அரசு அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம், பே‌ச்சுவா‌ர்‌த்தை மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள் அவரவ‌ர் இட‌‌ங்க‌ளி‌ல்மீ‌ண்டு‌ம் குடியேற ஆவண செ‌ய்ய வே‌ண்டு‌ம் என வே‌ண்டுகோ‌ள்விடு‌க்க‌ப்ப‌ட்டது .

உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை மு‌டி‌த்து வை‌த்து பழ.நெடுமாற‌ன் பேசுகை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள த‌மிழ‌ர்களை இல‌‌ங்கை அரசு முறையாக பராம‌ரி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லையெ‌னி‌ல் அ‌வ‌ர்களை .நா. சபை‌யிட‌ம் ஒ‌ப்பட‌ை‌த்துவிட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் த‌மிழ‌ர்க‌ள் எ‌ன்ற ஒரே கார‌ண‌த்‌தி‌ற்காக அ‌‌வ‌ர்களை இல‌ங்கை அரசு புற‌க்க‌ணி‌க்‌கிறது.

த‌மி‌ழ் ம‌‌ண்‌ணி‌ல் இரு‌க்கு‌ம் வரை இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் யாரு‌ம் அக‌திக‌ள் அ‌ல்ல . அவ‌ர்க‌‌ள் எ‌ங்க‌ள் சகோதர, சகோத‌‌ரிக‌ள். இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக நா‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து போரா‌டுவோ‌ம் எ‌ன்றா‌ர் பழ.நெடுமா‌ற‌ன்.

‌பி‌ன்ன‌ர் பழ‌ச்சாறு கொடு‌த்து உ‌‌ண்ணா‌விரத‌த்தை பழ.நெடுமாற‌ன் முடி‌த்துவை‌த்தா‌ர். இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌யிர‌த்‌த‌ி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது தேர்தல் விதி மீறல் ஆகும்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு அமலுக்கு வருவதாகதினமணியில் புதன்கிழமை செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை நரேஷ் குப்தா கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறல் ஆகும். இதுதொடர்பாக ஃபேக்ஸ், தொலைபேசிகளில் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண குறைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு எந்த அனுமதியும் கேட்கவில்லை.
1,08,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தமிழகம் முழுவதும் 1,08,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
மக்களவைத் தேர்தலில் அதிகமானோர் மனுத்தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இதர மாநிலங்களில் இருந்து 35,836 வாக்குப் பதிவு இயந்திரங்கள் (.வி.எம்.) கொண்டு வரப்பட உள்ளன.
சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கோவை, திண்டுக்கல், நாகப்பட்டினம் , புதுக்கோட்டை, பெரம்பலூர், மதுரை, தேனி விருதுநகர் மாவட்டங்களில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி மதுரை மாவட்டத்தில் இருந்து மட்டும் 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 15,000 முதல் 20,000 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன . போதிய விவரங்கள் இல்லாததால் இதர விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு மின்சாரம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான கட்டணம் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்வது தொடர்பாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சட்ட ஆலோசனை நடைபெறுகிறது.
குற்றப் பின்னணியுள்ள வேட்பாளர்கள் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் .
மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் தேர்தல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை முகவராகச் செயல்பட முடியாது.
அதேபோல அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.. ஆகியோர் முகவராகச் செயல்பட முடியாது என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
தனித் தமிழ் ஈழத்தை பாஜக ஆதரிக்கவில்லை என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எச். ராஜா தெரிவித்தார்.
இது குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. ஒரு நாடு பிளவுபட வேண்டும் என்று மற்றொரு நாடு கூறமுடியாது.
ஆனால் பிரபாகரனைக் காரணம் காட்டி அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது. இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கவும் மாட்டோம். விற்கவும் மாட்டோம் என்று வாஜ்பாய் அறிவித்தார்.
காங்கிரஸ் அரசு வாஜ்பாய் அரசின் முடிவை மீறி இலங்கைக்கு ஆயுதம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. இந்திய அரசின் உதவியுடன் தான் இலங்கையில் போர் நடக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் போருக்கு சோனியாவின் தனிப்பட்ட வன்மமே காரணம். இதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் இந்திய அரசுக்கு எதிராகவோ, இந்திய மக்களுக்கு எதிராகவோ பேசவில்லை. இலங்கைப் பிரச்னையை இந்தியாவால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற ஆதங்கத்தில் தான் அங்கு நடப்பவை பற்றி பேசினார்.
அரசு பஸ்களில் எவ்வித அறிவிப்பும் இன்றி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். இது பற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் துணையில்லாமல் முதன்முறையாக பாஜக தமிழகத்தில் வெற்றி பெறும் என்றார் எச். ராஜா.
!!!!!!!!!!!!!!!!!!
மக்களவைக்கு 3வது கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஓரிரு மோதல் சம்பவங்களைத் தவிர அமைதியாக தேர்தல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
மூன்றாவது கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 107 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (ராய் பரேலி), பாஜக தலைவர் எல்.கே .அத்வானி (காந்தி நகர், குஜராத்), முன்னாள் பிரதமர் தேவெ கெüடா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பா உள்ளிட்டோர் 3வது கட்டத் தேர்தலில் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களாவர்.
வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவுற்றது. வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். சில இடங்களில் பகலில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
அத்வானி, மாயாவதி வாக்குப்பதிவு: பாஜக தலைவர் அத்வானி, தனது மனைவி கமலாவுடன் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள ஷாபூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, லக்னெüவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பிகாரில் 3 போலீஸôர் காயம்: பிகாரில் கட்டிஹர் மாவட்டத்தில் மோங்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர் . இதில் மூன்று போலீஸôர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸôர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வன்முறையாளர்களைக் கலைத்தனர்.
கிஷண்கஞ்ச் தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் , தேர்தல் பணியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பெகுசராய் மக்களவைத் தொகுதியில் இரு வாக்குச்சாவடிகளிலிருந்து இரண்டு வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டன. ககாரியா தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தை வன்முறையாளர்கள் சேதப்படுத்தினர்.
காஷ்மீரில் 6 பேர் காயம்: அனந்த்நாக் மாவட்டத்தில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர் .
மாநிலத்தின் இதர சில இடங்களிலும் இதுபோல் சிறுசிறு மோதல்கள் நடைபெற்றன. எனினும் இந்த சம்பவங்களால் வாக்குப்பதிவுக்கு தடங்கல் ஏற்படவில்லை.
அறிவிக்கப்படாத ஊரடங்கு: தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை முதல் 50 மணி நேர வேலைநிறுத்தத்துக்கு ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையத் அலி ஷா கிலானி அழைப்பு விடுத்திருந்தார். இதனால் காஷ்மீர் பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தன. அரசு அலுவலகங்களும் மூடியிருந்தன.
தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கியத் தலைவர்கள் சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
போலீஸôர் குவிக்கப்பட்டிருந்ததால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. எனினும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.
ஏனைய மாநிலங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1567 வேட்பாளர்கள்: 3வது கட்டத் தேர்தலில் 101 பெண்கள் உள்பட மொத்தம் 1567 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
சிக்கிம் பேரவைக்கும் தேர்தல்: மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 32 தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது . மதியம் 2 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவாயின.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
பன்றிக் காய்ச்சல் நோய் ஐரோப்பாவில் மேலும் பரவியுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இது பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர் . சுவிட்சர்லாந்தும், நெதர்லாந்தும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதல் தமது நாடுகளில் ஏற்பட்டுள்ளதை உறுதிப் படுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் தற்போது இணைந்துள்ளன.
லக்சம்பர்கில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், பொது மக்கள் இது பற்றி பீதியடையத் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த ஒருங்கிணைந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
பன்றிக் காய்ச்சலை எதிர்க்கும் தடுப்பு மருந்துகளை அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற இதாலியின் யோசனையும், பன்றிக்காய்ச்சலால் மிக அதிக அளவு மரணங்கள் நிகழ்ந்த மெக்சிகோவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான வான் போக்குவரத்தை தடை செய்வது பற்றிய பிரான்சின் யோசனையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
!!!!!!!!!!!!!!!!
தெற்கு இராக்கிய நகரான பாஸ்ராவில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்த பிரிட்டிஷ் துருப்புக்கள் தமது பொறுப்பை அமெரிக்க இராணுவத்திடம் இன்று நடைபெற்ற ஆர்பாட்டம் இல்லாத வைபவம் ஒன்றின் வழியாக ஒப்படைத்தனர்.
இதற்கு சற்று முன்பு பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், பிரிட்டனின் போர் நடவடிக்கைகள் இராக்கில் முற்றுப் பெற்றதாக அறிவித்தார்.
இராக்கில் பணியில் இறந்த படையினருக்கான அஞ்சலி நிகழ்வில் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹட்டன் கலந்து கொண்டார். உயிரிழந்த 234 பேரின் பெயர்கள் படிக்கப்பட்டன . இதில் 179 பேர் பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இராணுவத்தினர் அல்லாத பல நாடுகளைச் சேர்ந்த சிவிலியன் கான்ட்ராக்டர்கள்
!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.