கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென இராணுவத்திற்கு அரசு உத்தரவு

கனரக ஆயுதங்கள் மற்றும் விமானத் தாக்குதல்களின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றமையினால், கனரக ஆயுதங்கள், எறிகணை வீச்சு மற்றும் விமான தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென இராணுவத்தினருக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,” இராணுவ நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் உள்ளன.

பொதுமக்களிற்கு உயிர் சேதங்கள் ஏற்படுத்தும் கனரக துப்பாக்கிகள், எறிகணை வீச்சுக்கள், போர் விமானங்களின் தாக்குதல்களை பயன்படுத்த வேண்டாமென எனது பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமது யுத்த முன்னெடுப்புகளை இடைநிறுத்தப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பாதுகாப்பு வலயங்கள் மீது கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியிருந்தமையை, இதன் மூலம் அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது என அரசியல் விமர்சகர்களும், இராஜதந்திரிகளும் தெரிவிக்கின்றனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.