அமெரிக்கா அவசியமற்ற முறையில் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்கிறது: ஜாதிக ஹெல உறுமய

இலங்iகியன் உள் விவகாரங்களில் அமெரிக்க அராசங்கம் அவசியமற்ற வகையில் தலையீடு செய்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்குலக நாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற வகையில் மூக்கை நுழைத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஓ பிளெக் தனது தகுதிக்கு மீறிய வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் நிலைமை மற்றும் யுத்த நடவடிக்கைகள் பொறுப்பற்ற வகையில் பிளெக் தகவல் வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களது தாளத்திற்கு ஏற்ற வகையில் இலங்கை அரசாங்கத்தை ஆட்டுவிக்க அமெரிக்காவும், பிரித்தானியாவும் அதீத முயற்சி மேற்கொண்டு வருவதாக எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.