மக்களுக்கு மண் சாப்பிட நேரிட்டாலும் போர் நிறுத்தப்பட மாட்டாது – பிரதமர்

மக்கள் மண் சாப்பிட நேரிட்டாலும் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தப்பட மாட்டாதென பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.


சர்வதேச சமூகத்தின் ஒட்டு மொத்த உதவிகளும் நிறுத்தப்பட்டால் கூட போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்டுள்ள மனிதாபிமான மீட்புப் பணிகள் எந்த காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஹிலாரி கிளின்ரன் உள்ளிட்ட சர்வதேச முக்கியஸ்தர்கள் பிரபாகரனை மீட்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நல்ல மனிதர்கள் யார் ? பாவிகள் யார் என்பதனை உலகம் விரைவில் உணர்ந்து கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடம்பெயர் மக்களை பாதுகாப்பது குறித்து சர்வதேச சமூகம் அக்கறை காட்டவில்லை எனவும் பிரபாகரனை பாதுகாப்பதற்கு அதிகளவு முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.