விடுதலைப்புலிகள் முக்கிய தலைவர்கள் சரண் : இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயகரா அறிவிப்பு

கொழும்பு : விடுதலைப்புலிகள் முக்கிய தலைவர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் சரணடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் ‌இலங்கை ராணுவத்தின் 58வது பிரிவு படையினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயகரா தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவத்தினர் போர் பகுதியில் இருந்து அப்பாவி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களோடு இவர்கள் இருவரும் இருந்ததாகவும், தாமாகவே முன் வந்து தாங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் சிறப்பு தூதர் பேசில் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். இலங்கையின் வடக்கு பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து வரும் சண்டையில் அப்பாவி மக்களின் நிலை குறித்து பேசுவதற்காக இந்தியா வருவதாக தெரிகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.