தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து என். கோபாலசாமி நேற்று ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 1969ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நவீன் சாவ்லா, கடந்த 2005ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராகியிருக்கும் அவர் அடுத்த ஆண்டு (2010) ஜூலை 29ஆம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார்.

மத்திய எரிசக்தித் துறை செயலராக இருந்த வி.எஸ். சம்பத், புதிய தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக பணி ஓய்வு பெறும் என். கோபாலசாமிக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.

அப்போது பேசிய கோபாலசாமி, எஞ்சியுள்ள மக்களவைத் தேர்தல்களையும் நவீன் சாவ்லா சுமூகமாக நடத்தி முடிப்பார் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

Source & Thanks : tamil.webdunia.

Leave a Reply

Your email address will not be published.