7 வயது மகளை அடித்து கொன்ற கொடூர தாய்-தந்தை கைது

அலகாபாத்: பணம் திருடியதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து தங்களது 7 வயது மகளை அடித்து கொன்ற கொடூர தாய் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

அலகாபாத்தை சேர்ந்த சிறுமி சன்னி. இவரது தந்தை ஆட்டோ ரிக்சா ஓட்டி வருகிறார். தாயார் உள்ளூர் மருத்துவமனையில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சன்னியை சேர்த்து மொத்தம் 5 குழந்தைகள்.

இந்நிலையில் நேற்று காலை சன்னியின் தந்தை தனது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 1000த்தை காணவில்லை என தேடியுள்ளார். அவருக்கு தனது கடைசி குழந்தையான சன்னி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து ஆத்திரமடைந்த அவர் அந்த குழந்தையை பிரம்பால் போட்டு அடித்துள்ளார். கணவருடன் சேர்த்து கொண்டு அந்த குழந்தையை தாயும் கடுமையாக தாக்கியுள்ளார்.

குழந்தை கதறி அழுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்கள் அந்த கொடூர பெற்றோர்கள் சன்னியை அடித்து கொன்றுவிட்டனர். அவளது உடலை துணியில் வைத்து புதைக்கவும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

போலீசார் உடனடியாக பெற்றோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். சன்னி பணத்தை திருடியதாக நினைத்து பெற்றோர் அவளை அடித்து துன்புறுத்தியதாகவும், அதில், அவள் இறந்துவிட்டதாகவும் சன்னியின் மூத்த சகோதரி போலீசாரிடம் தெரிவித்தாள்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.