மொனறாகலயில் மலையகத் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல்: 11 பேர் காயம்

சிறிலங்காவின் தென்பகுதியில் மொனறாகல பிரதேசத்தில் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் மலையகத் தமிழர்கள் மீது நேற்று புதன்கிழமையும் இன்று வியாழக்கிழமையும் ஆயுதம் தரித்த சிங்களக் கடையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த 11 தமிழர்களும் மொனறாகல அரசினர் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இத்தாக்குதலுடன் தொடர்புடைய இரு சிங்கள இளைஞர்களை மொனராகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலைசெய்யும் நூற்றுக்கணக்கான மலையகத் தமிழர்கள் அச்சம் காரணமாக காடுகளுக்குள் சென்று அடைக்கலம் புகுந்திருக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமையும்ஞாயிற்றுக்கிழமையும் இப்பகுதியில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் சுமார் 10 சிங்கள பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவத்தின் எதிரொலியாகவே மலையகத் தமிழர்கள் தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.