இலங்கையில் லேசான நிலநடுக்கம்

இலங்கையின் தெற்கே ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சில பிரதேசங்களில் புதன் காலை 8.50 மணியளவில் சில விநாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியிருக்கின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பாணம, பொத்துவில், அக்கரைப்பற்று உட்பட சில பிரதேசங்களில் இந்த நில நடுக்கத்தைத் தாங்கள் உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த நில நடுக்கம் காரணமாக அந்தப் பிரதேசங்களில் உள்ள மக்களிடையே ஓர் அச்ச நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரிக்டர் அளவு கோலில் நான்கு புள்ளிகளுக்கும் குறைவான அளவிலேயே நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாகவும், இதனால் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் எவையும் ஏற்படமாட்டாது என்றும், இதுகுறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியிருக்கின்றது.

நில நடுக்கம் ஏற்பட்ட பகுதகிளில் சில வீடுகளிலும் கட்டிடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதாக உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.