இந்த வருடம் பெருமளவிலான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர்

இந்த வருடத்தில் அதிகளவான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக அந்நாட்டு குடிவரவுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.


.
சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எரித்திரியாவிலிருந்து 782 விண்ணப்பங்களும் இலங்கையிலிருந்து 454 விண்ணப்பங்களும் நைஜீரியாவிலிருந்து 431 விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அகதி அந்தஸ்து குறித்த சட்ட விதிகள் கடுயைமாக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து நீதியமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் தொடர்பில் தற்போது விவாதம் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் அகதி அந்தஸ்து கோரியோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்தின் மத்திய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வருடத்தில் குறைந்தளவானோரே அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சோமாலியா மற்றும் எரித்திரியாவைச் சேர்ந்தவர்களினால் சமர்ப்பிக்கப்படும் அகதி அந்தஸ்திற்கான விண்ணப்பங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.