இந்திய வம்சாவழி தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல்: 11 பேர் காயம்; அச்சம் காரணமாக ஏனையோர் காடுகளில் அடைக்கலம்

சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மொனறாகலவில் இந்திய வம்சாவழி தமிழர்கள் மீது சிங்களக் கடையர்கள் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் அச்சம் காரணமாக தமது வீடுகளை விட்டு வெளியேறி காடுகளுக்குள் சென்று மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளச்சிக்கடைத் தோட்டம், போகாலைன் தோட்டம் ஆகிய பகுதிகளிலேயே சிங்களக் காடையர்கள் புகுந்து தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.

இந்தத் தோட்டங்களுக்குள் பிரவேசித்த சிங்கள இளைஞன் ஒருவரின் செய்கையால் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பெருமளவு பெருமளவு சிங்களவர்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் சகிதம் இந்தக் கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் படுகாயமடைந்த 11 தமிழர்கள் மொனறாகல அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்தே இந்திய வம்சாவழி தமிழர்கள் அச்சம் காரணமாக காடுகளுக்குள் சென்று அடைக்கலம் புகுந்திருக்கின்றனர்.

பிரித்தானியாவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து கொண்வந்து குடியேற்றப்பட்ட தமிழர்களின் வம்சாவழியினரே இப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.