களுத்துறை சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம்: 6 பேர் பலி

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து இன்று புதன்கிழமை காலை தப்பிச் செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் தப்பி செல்ல முயன்ற 11 கைதிகளில் 6 பேர் பலியாகியதாகவும் நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் சரணடைந்துள்ளதாகவும் களுத்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கைதிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.