சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை வேண்டும் என்று அதிபர் ஒபாமாவிடம் கோரிக்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களை சமாளிக்க கூடுதலான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வாரம் சோமாலிய நாட்டு கடற்பரப்பில் கடத்தப்பட்டு குறுகிய காலம் பிடித்து வைக்கப்பட்ட அமெரிக்க சரக்கு கப்பலில் இருந்த பணியாளர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமை வேண்டியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று உயிர்காக்கும் படகில் இந்தக் கப்பலின் காப்டனை, பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த கடற்கொள்ளையர்கள் மூவரை அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்று கடத்தப்பட்ட கப்பலின் தலைவரான ரிச்சர்ட் பிலிப்ஸஸை மீட்டனர்.

இவ்வாறு அவர் மீட்கப்பட்டது இன்னமும் கடற்கொள்ளையர்களின் பிடியில் இருக்கும் கடத்தப்பட்ட மற்ற கப்பல்களின் குழுவினர் குறித்த கரிசனையை அதிகரித்துள்ளது என்றும், வன்முறை சம்பவங்கள் மேலோங்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாக மொம்பாசாவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

இதனிடையே கென்ய நாட்டு துறைமுகமான மொம்பாசாவில் செய்தியாளர்களை சந்தித்த கடத்தபட்ட மெர்ஸ்க் அலபாமா என்கிற கப்பலின் குழுவினர், எவவாறு கப்பல் மீட்கப்பட்டு என்பது தொடர்பான விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.