அமெரிக்கா-ஐரோப்பாவுக்கு நேரடியாக பெட்ரோல் விற்கும் ரிலையன்ஸ்

மும்பை: இந்தியாவின முன்னணி தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டில் பெட்ரோலியப் பொருட்களை விற்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்தத் திட்டப்படி அமெரிக்காவின் சில்லறை வர்த்தகர்களுக்கு நேரடியாக பெட்ரோல் விற்கப் போகிறது ரிலையன்ஸ். அதேபோல பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் சுவிட்ஸர்லாந்திலும் பெட்ரோல் விற்பனை செய்யும் உரிமத்தைப் பெற்றுள்ளது ரிலையன்ஸ்.

ஏற்கெனவே சிங்கப்பூர், ஹூஸ்டன், லண்டன், துபாய் போன்ற நாடுகளில் தனது சில்லறை விற்பனை அலுவலகத்தைத் திறந்துள்ள ரிலையன்ஸ், இதுபோன்ற மேலும் பல கிளைகளை உலகம் முழுக்க திறக்கவிருக்கிறது.

அமெரிக்காவில் நேரடியாக பெட்ரோல் விற்பதன் மூலம் 5 முதல் 10 சதவிகிதம் வரை ரிலையன்ஸுக்கு செலவு மிச்சமாகும். மேலும் பல நாடுகளிலும் விற்பனையை அதிகரிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

ஏற்கெனவே காஸோலின் விற்பனையை அமெரிக்காவில் துவங்கியுள்ள ரிலையன்ஸ், நியூயார்க் துறைமுகப் பகுதியில் 1.3 ட்ரில்லியன் பேரல் சுத்தமான பெட்ரோலை இருப்பு வைக்கும் கிடங்கு வசதியைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இந்த வசதியைப் பெற்று ஒரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் மட்டுமே.

Source & Thanks : /thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.