வவுனியா முகாம்களில் உள்ள மக்களை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி

வவுனியா முகாம்களில் தங்கியுள்ள பொது மக்களை, இன்று முதல் அவர்களின் உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த முகாம்களில் தங்கியுள்ளவர்களை, அவர்களின் உறவினர்கள் சென்று பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளினால், பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாதவிடத்து, தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.