அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு 69 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் 69 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசு 69 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த தொகை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்வதே இதன் நோக்கம். அதன் மூலம் சிறிலங்கா தொடர்பான நல்லெண்ணங்களை அமெரிக்காவில் உருவாக்குவதற்கு அரசு முயற்சித்து வருகின்றது.

இதனிடையே அமைச்சர்களின் தேவைகளுக்காக மேலதிகமாக 231 மில்லியன் ரூபாய்களை அரசு ஒதுக்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.