பாதுகாப்பு வளையத்தில் 300 கிரனைட்களை விசிய ராணுவம்-பலர் பலி?

கொழும்பு: முல்லைத் தீவில் பாதுகாப்பு வளையப் பகுதியில் இன்று அதிகாலையிலும் இலங்கை ராணுவம் கிரணைட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த வளையத்தின் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்துடன், இத் தாக்குதலை ராணுவம் நடத்தியுள்ளது.

அதிகாலை 3.15 மணியளவில் நடந்த இத் தாக்குதலில் தூங்கிக் கொண்டிருந்த மக்களில் பலர் பலியாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

சுமார் முக்கால் மணி நேரம் 300க்கும் அதிகமான கிரனைட் குண்டுகளை ராணுவம் இங்கு வீசித் தாக்குதல் நடத்தியது.

இடம் பெயர்ந்து வந்து பாதுகாப்புப் பகுதி என்று ராணுவத்தால் கூறப்படும் இந்தப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள மக்கள் தினந்தோறும் இந்தத் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக பதுங்கு குழிகளையும் பயன்படுத்த முடியாத நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது தான் மிகப் பெரிய கொடுமை.

Source & Thanks: thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.