லண்டனில் 1.5 லட்சம் தமிழர்கள் பிரமாண்ட பேரணி

லண்டன்: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய கோரி லண்டனில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இன்று மிக பிரமாண்டமான பேரணி நடத்தினர்.

இலங்கை அரசின் இனப் படுகொலையை கண்டித்தும் இதை சர்வதேச சமுதாயம் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்தும் இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதை இங்கிலாந்து நிறுத்தக் கோரியும் இந்தப் பேரணி நடந்தது.

தமிழீழக் கொடிகள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களுடன் லண்டனின் தேம்ஸ் நதி எம்பேங்க்மென்ட் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி ஹைட்பார்க் கார்னர் என்ற இடத்தை நோக்கி சென்றது.

இந்தப் பேரணி ஒரு இடத்தைக் கடக்க 4 மணி ஆனது.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இதில் பங்கேற்றனர். இதில் இங்கிலாந்து எம்பி்க்கள் சிலரும் பங்கேற்று தமிழர்களுக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்தப் பேரணி ஹைட்பார்க் கார்னரை அடைந்த பின் அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பேரணியால் லண்டனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.