3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தது இலங்கை!

கொழும்பு: இலங்கையில் போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்கள் வெளியேறும் வகையில் இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

நாளையும் செவ்வாய்க்கிழமையும் இந்தப் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று அந் நாட்டு செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யபா கூறியுள்ளார்.

பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ள மக்கள தப்பிச் செல்லும் வகையில் இந்த தாற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுகிறது என்றார்.

பாதுகாப்பு வளையம் என்று கூறிக் கொண்டு இந்தப் பகுதியியிலும் தினந்தோறும் குண்டுகளை வீசி தமிழர்களை ராணுவம் கொன்று வருவது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள செவ்வாய்க்கிழமை தமிழ்-சிங்கள புத்தாண்டு தினமாகும்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.