‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (12.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வரும் போராட்டங்களினால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பல வழிகளிலும் நெருக்கடிகள் தோன்றியிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இது தொடர்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
பிரித்தானியாவில் உள்ள தேம்ஸ் பௌத்த நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கள சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு பிரித்தானிய காவல்துறையினர் பாதுகாப்புக்களை வழங்க மறுத்ததனால் கைவிடப்பட்டுள்ளன.
இக்கொண்டாட்டங்களில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ரஜபக்சவின் சகோதரரும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தித்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கனடாவில் நடைபெறும் தமிழ் மக்களின் பேரணிகளை தடுத்து நிறுத்துமாறும் தமிழர்களின் தேசியக் கொடியினை அகற்றுமாறும் கனடாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் விடுத்திருந்த கோரிக்கையை கனடிய வெளிவிவகார அமைச்சர் லோறன்ஸ் கனன் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
போராட்டங்களை தடுக்கும் உரிமை எனக்கு இல்லை. கனடாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும்; நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம்; மக்கள் தமது கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளியிட இங்கு எவருக்கும் உரிமை உண்டு என்று கனன் தெரிவித்திருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திட்டமிடப்பட்டுள்ள வடக்குத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேர்தல்களை நடாத்துவது குறித்த விவாதங்கள் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது .

புதிய சட்ட மூலமொன்றின் மூலம் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தத் தேவையான சட்டப் பின்னணி உருவாக்கப்படவுள்ளது.

புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வடக்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக என சிறிலங்கா கொடுங்கோல் அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி படையினர் இன்று அதிகாலையில் அகோர எறிகணைத் தாக்குதலை தொடங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

நான்காவது ஈழப் போராட்டத்தின் மிகவும் மூர்க்கமான சமர்களை வன்னி தற்போது சந்தித்துக்கொண்டிருக்கின்றது . வன்னிப் பிராந்தியமே தொடர் குண்டு வெடிப்புக்களாலும், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களாலும் அதிர்ந்துகொண்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் முக்கிய கோட்டையாகக் கருதப்பட்ட புதுக்குடியிருப்புக்கு கிழக்கே உள்ள ஆனந்தபுரம், பச்சைப்புல்மோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான மோதல்களைத் தொடர்ந்துமக்கள் பாதுகாப்பு வலயம்என அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் ஐந்து படையணிகள் அதன் மீது நான்கு முனைகளில் கடும் தாக்குதலை தொடங்கியிருக்கின்றது.
சுமார் மூன்று லட்சம் மக்கள் இருப்பதாகக் கருதப்படும் பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதலைத் தவிர்க்குமாறு .நா. சபை உட்பட இணைத் தலைமை நாடுகள், அமெரிக்கா , பிரித்தானியா, கனடா என உலகம் முழுவதிலும் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலைமையில் அவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு இந்தத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியிருப்பதாக படை நடவடிக்கைகளுக்கான தலைமையகம் அறிவித்திருக்கின்றது .
நான்கு முனைகளில் படையினர் தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாகவும் கடும் மழைக்கு மத்தியிலும் தீவிரமான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
‘பாதுகாப்பு வலய’ பகுதியில் போர் நடைபெறாத நிலையிலேயே இந்தப் பகுதி மீது படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி வந்திருக்கின்றனர்.
நாளாந்தம் 50 முதல் 60 போர் வரையில் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலை நடத்தி அதற்குள் பிரவேசிப்பதற்கு படையினர் முற்பட்டுள்ள இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 800 தாண்டிச் சென்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை 350 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், நேற்று முன்நாளும் சுமார் 300 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள், ‘பாதுகாப்பு வலயபகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் என்ற செய்தியை தெளிவாகக் காட்டியிருக்கின்றது.
முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 12 மைல் நீளமான பகுதியே சிறிலங்கா அரசாங்கத்தினால் மக்கள் பாதுகாப்பு வலயமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் பிரகடனம் செய்யப்பட்டது.
புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம், கரைய முள்ளிவாய்க்கால், வெள்ள முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகள் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
போர் சூனியப் பகுதியாக இந்தப் பகுதியை அரசாங்கம் அறிவித்ததை நம்பி பெருந்தொகையான பொதுமக்கள் இதற்குள் வந்த போதிலும், தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதல்களால் இந்தப் பாதுகாப்பு வலயம் கடந்த மூன்று மாத காலமாக இரத்தக்களரியாகவே காணப்படுகின்றது.
இப்பகுதியில் செயற்படும் மருத்துவமனைகளில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி ஜனவரி மாதத்துக்குப் பின்னரான கடந்த சுமார் மூன்றரை மாத காலப்பகுதியில் இங்கு சுமார் 5 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இதில் பலர் உடல் ஊனமடைந்து எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர்.
மக்கள் வாழ்வதற்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளையும் கொண்டிராத இந்தக் கடற்கரைப் பகுதியில் எறிகணைத் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்குத் தேவையான பதுங்குகுழிகளைக் கூட அமைக்க போதிய வசதிகள் இல்லை. படுகாயமடைந்தவர்களைப் பாதுகாக்க தேவையான மருந்துகளோ அல்லது மருத்துவமனை வசதிகளோ இல்லை.
இந்நிலையில் பாதுகாப்பு வலயத்தை நான்கு முனைகளில் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தத் தொடங்கியிருப்பது பாரிய ஒரு மனிதப் பேரவலத்துக்கு வழிவகுப்பதாக அமையும் என அனைத்துலக ரீதியாக ஒலிக்கும் குரல்களையிட்டு எந்தவகையிலும் கவனத்தைச் செலுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச அரசு தயாராக இல்லை என்பது தெரிகின்றது.
மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எதிர்வரும் 14 ஆம் நாள் பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கு முன்னதாக நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் .
புத்தாண்டு பிறக்கும்போது நாடு ஓரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் என ஆளும் கட்சியின் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனா்.
அத்துடன், இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் மேல்மாகாண சபைத் தேர்தலின் வெற்றிக்கும் போர்முனைச் செய்திகளைத்தான் அரசாங்கம் பெரிதாக நம்பியிருக்கின்றது.
இந்நிலையில்தான் சிறிலரங்காவின் பலம் வாய்ந்த படைப்பிரிவுகளாகக் கருதப்படும் 53, 55, 58 மற்றும் 59 ஆவது படைப்பிரிவுகளுடன் இணைந்து 8 ஆவது சிறப்பு படைப்பிரிவும் இந்த பாரிய தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வலயத்தின் கிழக்குப் பகுதி முழுமையாகக் கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பகுதியிலும் பாதுகாப்புக்காக கடற்படைக் கப்பல்கள் பெருமளவுக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வலயத்தின் வடக்குப் பகுதியில் 55 ஆவது படைப் பிரிவும், மேற்கில் நந்திக் கடலை அடுத்துள்ள பகுதிகளில் 55, 58 ஆவது படைப்பிரிவுகளுடன் 8 ஆவது சிறப்பு படைப்பிரிவும் , பாதுகாப்பு வலயத்தின் தென்பகுதியில் 59 ஆவது படைப் பிரிவும் நிறுத்தப்பட்டுள்ளன.
பெருமளவு படையினர் இப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், பாரிய கனரக ஆயுதங்கள் , தாங்கிகள், பல்குழல் தாங்கிகள் என பெருமளவு ஆயுதங்களும் இராணுவ வாகனங்களும் இந்தப் பகுதியை நோக்கி நகர்த்தப்பட்டு தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதால் பாரிய அனர்த்தங்களுக்கு வாய்புள்ளதாக மனிதாபிமான அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
தற்போதுள்ள நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மட்டும்தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இப்பகுதியில் செயற்பட்டு வருவதால் உருவாகக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கும் அவர்கள் முழுமையாகத் தயாரில்லை என்றுதான் கூற வேண்டும்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்களில் இருவர் அண்மைக்காலங்களில்பாதுகாப்பு வலயபகுதியில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் அனைத்துலகத்தில் இருந்து வரக்கூடிய பாரிய கண்டனங்களைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாக தனது இந்த இராணுவ நடவடிக்கையை ஒரு பாரிய மனிதாபிமான நடவடிக்கையாகக் காட்டிக்கொள்வதற்கே சிறிலங்கா அரசாங்கம் முற்படுகின்றது.
மக்களை மீட்பதற்கான மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கை தொடங்கியிருக்கின்றது என்றே இது தொடர்பாக நேற்று முன்நாள் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக்கின்றது .
படையினர் மேற்கொண்டிருக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டம் தொடங்கிவிட்டது எனவும் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை படையினர் தொடங்கியுள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சின் நேற்று முன்நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு வலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அம்பலவன்பொக்கனைக்கு அருகில் சென்றுள்ள 58 ஆவது படைப்பிரிவினர் அம்பலவன்பொக்களைக்குள் பிரவேசிப்பதற்கான பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடங்கிய போது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்நாள் அதிகாலை முதல் இப்பகுதியில் கடும் மோதல் இடம்பெற்ற போதிலும் , படையினரால் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை என களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
விடுதலைப் புலிகளின் கடுமையான முறியடிப்புத் தாக்குதல்களால் படையினர் தரப்பில் பாரிய உயிரழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில் விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் இப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் சபதம் எடுத்திருப்பதால் அடுத்து வரும் நாட்களில் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம்.
அப்பாவிப் பொதுமக்கள் இதில் கொல்லப்படுவார்கள் எனபதைத் தெரிந்திருந்தும் ஒன்றுமே செய்ய முடியாமல் அனைத்துலக சமூகம் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகின்றதா என்பதுதான் இன்று எழும் கேள்வி!.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் மேற்குலக நாடுகளின் மனச்சாட்சியை பெருமளவுக்குத் தொட்டிருக்கின்ற போதிலும் அவர்கள் எதனையும் செய்ய முடியாதவர்களாகவே இருக்கின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு நகரில் அரசியல் கட்சியொன்றின் அலுவலகத்திற்கு அண்மித்த பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் பொலிஸாரால் நேற்று நண்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ரொக்கட் லோஞ்சர் – 01 ,அதற்கான குண்டுகள் – 02 ,கைக்குண்டு – 01 ,சி.4 வெடிப் பொருள் மற்றும் ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் ஆகியனவே கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன .

கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மலசல கூட பகுதியில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ,தகவலொன்றின் பேரிலேயே இவை கண்டு பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட நேரடி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஓரிரு நாட்களினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமை குறிப்பிட்ட இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரிரு நாட்கள் ரயில் சேவைகளும் நடை பெற்றன.இருந்த போதிலும் மட்டக்களப்பிலிருந்து மட்டுமே நேரடி ரயில் சேவை இந் நாட்களில் நடைபெற்றது.

ரயில் நேர அட்டவணை தொடர்பாக ஏற்பட்டுள்ள சில நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே இச் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அஇருப்பினும் ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்;டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரித்தானியாவில் தமிழ் இளையோர்களால் நடத்தப்பட்ட காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தை அடக்கும் வகையில் பிரித்தானிய காவல்துறையினர் நேற்றிரவு செயற்பட்டதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள சதுக்கத்தில் தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது .
இப்போராட்டத்தில் இரண்டு இளைஞர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தையும் நடத்தினர். இவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடுமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வழங்கிய உறுதிமொழியை ஏற்பாட்டாளர்கள் சாதகமாகவும் பரிசீலித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பிரித்தானிய அரசாங்கம் காவல்துறையினரை ஏவி இந்த போராட்டத்தை அடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது.
இதன் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வந்த சதுக்கத்தில் இருந்த தமிழ் மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதுடன் மேற்படி சதுக்கத்திற்குள் எவரும் உட்செல்ல முடியாத வகையில் திடீரென தடுப்பு வேலிகளை அமைத்து வழமைக்கு மாறாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நேற்றிரவு முதல் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நேற்றைய நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணிக்கு பிரித்தானிய தமிழ் இளையோர்களால் நடத்தப்பட்டு வந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களும் சென்றதால் நேற்று மாலையில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்படி சதுக்கத்தில் இருந்த தமிழ் மக்களை காவல்துறையினர் பலாத்காரமாக அங்கிருந்து வெளியேற்றி வீதிகளின் ஓரமாக விட்டனர்.
அத்துடன், மேற்படி போராட்டத்தில் சாகும்வரை உண்ணாநிலையினை தொடர்ந்து வந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற இளைஞனையும் காவல்துறையினர் அங்கிருந்து அகற்றினர். அவர் வீதியின் ஓரத்தில் மழைக்கு மத்தியிலும் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை தற்போது தொடர்ந்து வருகின்றார்.
இச்சம்பவத்தால் கொதிப்படைந்த பிரித்தானிய தமிழ் இளையோர் சம்பவ இடத்தில் திரண்டு தமது எதிர்ப்பை காட்டினர்.
எனினும் போதுமான மக்கள் அங்கு இல்லாததால் இன்று காலை மீண்டும் வீதியை குறுக்கே வழிமறிக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கமும் காவல்துறையினரும் தமிழ்மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆர்ப்பாட்டத்தை அடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தாங்கள் சந்தேகிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துள்ளனனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர். இது இலங்கை பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை புரிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுவதாகவே உள்ளது. யுத்த வலயங்களில் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் 1738 பிரகடனத்தை இலங்கை அரசு மீறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது . பாரிய அளவில் மனிதாபிமான சீர்குலைவும் யுத்தக் குற்றங்களும் வன்னியில் இடம்பெறும் நிலையில் சர்வதேச சமூகம் போர் நிறுத்தம் வேண்டும் என்று விடுக்கும் கோரிக்கைக்கு இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தொண்டு நிறுவனங்கள் வன்னிக்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறது. சுதந்திரமான பத்திரிகையாளர்களின் பிரசன்னம் இல்லாத இந்த யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது வெட்கக் கேடான

செயலாகும். வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடை விதிக்கும் விடுதலைப் புலிகள் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இராணுவ வெற்றிகளை செய்திகளாக அரசு தருவதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் கூறுகிறது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயற்பட விடாமல் பொதுமக்கள் தகவல் அறியும் சுதந்திரத்திற்கு அரசு தடையாக உள்ளதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

இலங்கை அரசும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது.

எங்கே இரத்தம் சிந்தப்படுகிறதோ அங்கே பேனா மையும் சிந்தப்படவேண்டும் என்றும் சர்வதேச பத்திரிகையாளர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களும் தம்முடன் சேர்ந்து பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அண்ணளவாக 1 இலட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி கரையோரப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்ல முடிவதில்லை. வான் தாக்குதல்களால் வன்னிப் பிரதேசத்தில் 2000 பேர் வரை இறந்துள்ளனர்.

உலகிலேயே மிகப் பெரிய மனிதாபிமான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக இராணுவம் கூறுகிறது. ஆனால் வன்னிப் பகுதியில் பொதுமக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட விடுதலைப் புலிகள் தடுத்து வரும் அதேவேளை அரசு அப் பகுதியில் குண்டு வீச்சில் ஈடுபடுகிறது .

வன்னி மாவட்டம் தொடர்பாக பத்திரிகையாளர் மாநாட்டிற்கு கடந்த சில வாரங்களாக இராணுவம் ஏற்பாடு செய்ய வில்லை. பெப்ரவரி 12 ஆம் திகதி கனடாவில் வெளிவரும் செய்தி ஊடகங்களுக்கான நிருபர் புண்ணியமூர்த்தி சத்திய மூர்த்தி செல்வீச்சில் கொல்லப்பட்டார் . மார்ச் மாதத் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழ் நெற் நிருபர் குண்டு வீச்சில் கொல்லப்பட்டார். மார்ச் மாதத் தொடக்கத்தில் ஈழநாதம் பத்திரிகையை வன்னியில் விநியோகம் செய்து வந்த சசிமதன் ஆனந்தபுரம் பகுதியில் கொல்லப்பட்டார்
!!!!!!!!!!!!!!!!!!!!!

அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேச அகதி முகாம்களில் தங்கியிருக்கும் வன்னிச் சிவிலியன்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்hளர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பார்வையிட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் , இது குறித்து மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னிச் சிவிலியன்கள் தங்கியிருக்கும் அகதி முகாம்கள் மற்றும் சிகிச்சை பெற்றும் வைத்தியசாலைகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் ஜயலத் ஜயவர்தன, நவனீதம்பிள்ளைக்கு கடித மூலம் அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அமைச்சர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

சிவிலியன்களை பார்வையிடவும், வைத்தியசாலைகளுக்குச் செல்லவும் அனுமதி பெற்றுக் கொடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அரசாங்க வைத்தியர்களை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு சுகாதாரப் பணிப்பாளர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை உண்மைக்குப் புறம்பானதென சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கப் படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களினால் சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டதாக குறித்த சுகாதாரப் பணிப்பாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவர்கள் தற்போது காயமடைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கே சிகிச்சையளித்து வருவதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு குறித்த வைத்தியர்கள் பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தரையிறங்கியிருக்கலாம் எனவும் இந்த அணியின் நகர்வின் போதே அலம்பில் பகுதியில் கடற்சமர் இடம்பெற்றதாகவும்லக்பிமவார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகலக்பிமஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

முல்லைத்தீவு கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த சனிக்கிழமை (04.04.09) இரவு 11:45 நிமிடமளவில் கடற்புலிகளின் 15 படகுகளை அவதானித்துள்ளனர்.
இந்த படகுகள் வெல்லாமுனையில் இருந்து முல்லைத்தீவுக்கு வடக்காக நோக்கிச் சென்று கொண்டிருந்தன.
படகுகள் மீது வயர் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது. இதன் போது இரு படகுகள் சேதமடைந்த போதும் ஏனைய படகுகள் ஏவுகணையின் தூரவீச்சில் இருந்து விலகிச் சென்றுள்ளன.
அதன் பின்னர் நாயாறு கடற்பரப்பில் நின்ற கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு பெரும் கடற்சமர் இடம்பெற்றிருந்தது.
முதற்கட்ட சமரின் பின்னர் கடற்புலிகளின் படகுகள் திருகோணமலை நோக்கிச் செல்வதாக கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்கள் திருகோணமலை நோக்கி தமது கவனத்தை திருப்பியிருந்தனர் .
ஆனால் விடுதலைப் புலிகளின் படகுகள் கொக்குத்தொடுவாயில் தரையிறங்க முயற்சித்தன.
கொக்குத்தொடுவாயில் இறங்கி இராணுவ அணிகளை பின்புறமாக தாக்குவதே விடுதலைப் புலிகளின் உத்தி.
இதனிடையே வேறு ஒரு நோக்கத்திற்காக விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம் 100-க்கும் அதிகமான போராளிகளுடன் 20 படகுகள் சகிதம் கடற்கரையில் நின்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெயத்தின் அணியின் நோக்கம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. எனினும் ஏதோ ஒரு சிறப்பு திட்டத்துடன் அவர்கள் அங்கு வந்திருந்தது உறுதியானது.
ஜெயத்தின் கட்டளைகளுக்கு அமைவாக செயற்படுமாறு அவர்களுக்கு பணிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
ஜெயத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ள போதும் , விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் அதிகளவில் இயங்கியதை இராணுவத்தின் புலனாய்வுபிரிவு அவதானித்துள்ளது.
எனினும் விடுதலைப்புலிகள் புதிய சங்கேத சொற்களை பயன்படுத்தியதனால் அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலும் ஒரு பாரிய கடல் நடவடிக்கை ஒன்றை அவர்கள் அன்று மேற்கொண்டிருக்கலாம் என தெரிகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரசாங்க ஆதரவு துணை இராணுவக் குழுக்களினால் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அழுத்தங்கள் நிறுத்தப்பட வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வோர் சோதனைச் சவாடிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் தப்பிச் செல்லக் கூடிய வகையிலான வலுவான ஆதரவினையும், பாதுகாப்பினையும் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சூரியன் எப். எம். வானொலிச் சேவையின் முன்னாள் செய்திப் பொறுப்பதிகாரி நடராஜா குருபரன், தி நேசன் பத்திரிகையின் பிரதி ஆசிரியர் கீத் நொயர், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடக இணைப்பாளர் மஹிந்த ரத்னவீர, ஊடகவியலாளர் நாமல் பெரேரா ஆகியோர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவம், சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதல், உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை, சு. வித்தியாதரன் கடத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு ஊடக அடக்குமுறைச் சம்பவங்கள் இந்த ஆண்டிலும் தொடர்ந்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக அடக்குமுறைச் சம்பவங்கள் குறித்து இலங்கையின் ஐந்து முன்னணி ஊடக அமைப்புக்கள் ஜனாதிபதியிடமும், மதத் தலைவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் 69 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசு 69 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த தொகை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்வதே இதன் நோக்கம். அதன் மூலம் சிறிலங்கா தொடர்பான நல்லெண்ணங்களை அமெரிக்காவில் உருவாக்குவதற்கு அரசு முயற்சித்து வருகின்றது.
இதனிடையே அமைச்சர்களின் தேவைகளுக்காக மேலதிகமாக 231 மில்லியன் ரூபாய்களை அரசு ஒதுக்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக பிரபல ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேல்கொத்மலை நீர்மின் திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அனல் மின் நிலையம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் உள்ளிட்ட நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தித் திட்டங்களை இடைநிறுத்த அல்லது மெதுவான வேகத்தில் முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டில் அரசாங்க வருமான வழிகள் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் சில காலங்களுக்கு ஒத்தி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சர்வதேச நிதி நெருக்கடி நிலை சாதகத் தன்மையை எட்டும் வரையில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாதென குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் உதவிகளும் கனிசமான அளவு குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தம் மற்றும் பாதுகாப்பு செலவீனங்களுக்காக 171 பில்லியன் ரூபா நிதி
செலவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கை பாரிய வெற்றி பெற்றுள்ளது . புலிகளிடமிருந்த முழு நிலப்பரப்பும் படையினரால் மீட்கப்பட்டதையடுத்து அவர்கள் இப்போது பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி ஒழிந்து வாழ்கின்றனர் என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை மீட்கும் மனிதாபிமான மீட்புப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக தொடர்ந்த யுத்தம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனவும், அதன் பின்னர் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!
வன்னி மக்களது உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் சுயாதீன சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு பின்னரான வடக்கு என சில கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் , இந்த கருத்து மெய்ப்பிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் ஒருபோதும்
இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் சுதந்திரப் போராட்டத்தை தலைமையேற்று மேற்கொண்டு வருவதாகவும், வன்னி மக்கள் மத்தியில் பிரபாகரன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் புதல்வர் சார்ள்ஸ் அன்டனி காயமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உயர்மட்ட இராணுவ ஒத்துழைப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனச் சுத்திகரிப்பை தவிர்க்கும் நோக்கிலேயே யுத்த நிறுத்தம் குறித்து புலிகள் அதிக முனைப்பு காட்டி வருவதாகவும், தோல்விக்கு அஞ்சி போர் நிறுத்த கோரிக்கை
விடுக்கப்படவில்லை எனவும் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழர் இன ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்த போர் நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புலிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவது தொடர்பில் அவர்களின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் பிரஸ்தாபித்துள்ளார் .
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன்னவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே ரிச்சர்ட் பௌச்சர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கையின் முல்லைத்தீவு வடக்கின் மிகச்சிறிய பகுதியில் சுமார் 500 புலிகள் உள்ளனர். அவர்களால் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பௌச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
அதன்போது இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம்மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை பிரதி அமைச்சர் பௌச்சர் மீளவும் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார் என்று இங்குள்ள இலங்கைத் தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது .
!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!
CXeûLj RªZo ©Wfû]dLôL Uj§V AûUfNWôL CÚkR Au×U¦ûV TR® ®XLf ùNôpXôRÕ Hu Guß ØRpYo LÚQô¨§ úLs® GÝl©Ùs[ôo.
CXeûLj RªZo ©Wfû]dLôL Bh£ûVd úLPVUôLl TVuTÓjRXôúU Guß ùYs°d¡ZûU WôURôv úLs® GÝl©«ÚkRôo.
CRtÏ T§X°dÏm YûL«p N²d¡ZûU ØRpYo LÚQô¨§ ùY°«hP A±dûL:
WôURô³u Ød¡V ϱdúLôú[ §ØL Bh£«p CÚdLd áPôÕ GuTÕRôu. LûP£YûW Id¡V ØtúTôdÏd áhP¦ Bh£«úX AûUfNWôL TR®f ÑLm AàT®jÕ®hÓ, AkRd Lh£dúL ÕúWôLm ùNnÕ®hÓl úTô]Yo WôURôv. Lôe¡Wv Lh£«u RûXûU«úX áhP¦ Guß BûN YôojûR á± AkRd Lh£ûV A§ØL®u TdLm CÝdL TPôRTôÓThÓ ARtLôL ù_VX#Rô êXm Lôe¡W^ýdÏ AûZl×®Pf ùNnRYo. B]ôp Lôe¡W³u EߧVô] ¨ûXVôp HUôt\m AûPkÕ RtúTôÕ CXeûLj RªZoLÞdLôL Hu Bh£ûV CZdLd áPôÕ Gu¡\ôo.
RªÆZm UXÚUô]ôp êu\ôYÕ Øû\VôLd áP TR®ûV CZdLj RVôo Guß NhPl úTWûY«úXúV A±®jÕsú[u.
§ØL TR® ®XL úYiÓm GuT§p ϱVôL Es[ WôURôv, CXeûLj RªZoLs ®`Vj§p Uj§V AW£u ùNVpTôÓ N¬«pûX Guß á± Uj§V AûUfNWô«ÚkR R]Õ ULu Au×U¦ûV Wô´SôUô ùNnVf ùNôp#«ÚdLXôúU.
CXeûLj RªZoLÞdÏ ÕúWôLm ùNnÕs[RôLd ϱl©Óm ûYúLôûYj R®W úYß GYÚm ÕúWôLjûRl Tt±l úTÑYRtÏ RϧVô]YWôL CÚdL Ø¥VôÕ. Hù]²p êuß Øû\ Uô¨XeL[ûY Eßl©]o TR® ùLôÓjR Lh£dúL ÕúWôLm ùNnÕ®hÓ ùY°úV ùNu\Yo ûYúLô.
©WTôLWû] Ck§VôÜdÏd ùLôiÓ YW úYiÓm Guß NhPl úTWûY«p ¾oUô]m ùLôiÓ YkRYo ù_VX#Rô. CRtLôL çRWL SûPØû\lT¥ Aû]jÕ ØVt£Lû[Ùm GÓdL úYiÓm Gußm, ©WTôLWu ׬kR Ït\eLÞdLôL Ck§Vô®p Es[ ¿§Uu\j§p E¬V ®NôWûQdÏ EsTÓjR úYiÓm Gußm ¾oUô]m ùLôiÓ YkRôo.
©WTôLWû]l ©¥jÕ SôÓLPjR Ø¥V®pûX G²p, CXeûL AW£u ER®úVôÓ Ck§V WôÔYjûR Aàl© ©WTôLWû] £û\l©¥dL Uj§V AWûN RªZL NhPl úTWûY êXm úLhÓd ùLôiPYo ù_VX#Rô.
CXeûLl ©Wfû]«p Ck§Vô KW[®tÏjRôu RûX«P Ø¥Ùm Guß ùNôu]YoRôu ù_VX#Rô.
CXeûLj RªZoLû[d LôdL úYiÓm Guß AùU¬dLô, Ce¡XôkÕ, _lTôu, SôoúY úTôu\ SôÓLs úLô¬dûL ®ÓjÕs[]. I.Sô. ùTôÕf ùNVXo Tôu-¡-êu ùRôûXúT£ êXm CXeûL A§To Wô_ThN®Pm úT£Ùs[ôo. CXeûLj RªZoLû[d LôdL GpúXôÚm AdLû\ Lôh¥YÚYÕ EiûURôu. B]ôp CeÏs[ AW£Vp Lh£Ls Uj§V, Uô¨X AWÑLs ÁÕ Ïû\ áßY§p CuTm LiÓ YÚ¡\ôoLs.
CXeûL WôÔYm RªZoLû[ ÅrjÕYRtÏ Wô_ThN AWÑdÏ ERÜm “Am©’ Vôo Guß Ck§V Lmë²vh Lh£«u Uô¨Xj RûXYo Rô. Tôi¥Vu úLs®ùVÝl©Ùs[ôo. Wô_ThNÜdÏ BRWÜ ùR¬®jRYo ù_VX#Rô. AYÚdÏ ÕûQ úTô«ÚlTYo Tôi¥Vu. ClúTôÕ Vôo “Am©’ Gu\ EiûU ׬Ùm Guß Ï±l©hÓs[ôo LÚQô¨§.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
A§ØL A¦«]o CXeûL RªZoLÞdÏ G§WôLf ùNVpTÓYRôp, EiûUVô] Rªr C] EQoYô[o AûUl×Lû[ JÚe¡ûQdLl úTôYRôL ®_V ¥.Wôú_kRo ùR¬®jÕs[ôo.
CXh£V §ØL®p S¥Lo Uuão A#Lôu CûQÙm ¨Lrf£ ùNuû] §VôLWôVSL¬p Es[ AdLh£ AÛYXLj§p N²d¡ZûU SûPùTt\Õ. ARu ©\Ï AdLh£j RûXYo ®_V ¥.Wôú_kRo ùNn§Vô[oL°Pm á±VRôYÕ:
“”§ØL, A§ØL RûXûU«Xô] CWiÓ A¦LÞúU CXeûLj RªZoLÞdÏ G§Wô]ûY. CRû]j úRôÛ¬jÕd LôhÓYúR GeLs LPûU.
EiûUVô] Rªr C] EQoYô[o AûUl×Lû[ JÚe¡ûQd¡\ ØVt£«p DÓTPl úTô¡ú\ôm. AlT¥ AûU¡\ AûUl×Lú[ôÓ úNokÕ Ï±l©hP £X ùRôϧL°p úTôh¥«Pl úTô¡ú\ôm.
Ls[dϱf£, §Úf£, ¡ÚxQ¡¬, úNXm, §ÚYiQôUûX, CWôUSôR×Wm, £YLeûL, Uj§V ùNuû] Es°hP £X ùRôϧL°p úTôh¥«ÓYÕ Tt± úVô£jÕ YÚ¡ú\ôm.
C§p Ls[dϱf£ ùRôϧ«p ¨fNVm úTôh¥«ÓúYôm.
®_VLôkj AkRj ùRôϧ«p AYWÕ ûUjÕ]ûW ¨ßj§Ùs[ôo. CXeûLj RªZoLs ©Wfû]VôLhÓm, úRoRp áhP¦ ϱjR ©Wfû]VôLhÓm AYûWl úTôp ØuàdÏl ©u ØWQôLl úT£VYoLs CpûX.
TpúYß TϧLÞdÏf ùNuß ©WNôWm úUtùLôs[«ÚlTRôp úRoR#p Sôu úTôh¥«ÓYÕ Ï±jÕ úVô£jÕ YÚ¡ú\u. AûUÙm ãZûXl ùTôß jÕ úRoR#p úTôh¥«ÓúYu” G]d á±]ôo.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பா.ஜனதாவுடன் முன்னணி கட்சிகள் எதுவும் கூட்டணி சேரவில்லை. சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தது. இதுவரை பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.
ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான கோரிக்கையுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
சமத்துவ மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடருவதாக பா.ஜனதா கூறுகிறது. சமத்துவ மக்கள் கட்சியும் இதுவரை பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கவில்லை . இன்றும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சியுடனும் பேசி வருகிறது. இன்று மாலைக் குள் எந்த கட்சியுடன் கூட்டணி என்று முடிவு செய்து விடுவோம். நாளை சரத்குமார் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாரதீய ஜனதா எந்த முடிவையும் தாங்கி கொள்ள தயாராகி விட்டது. கூட்டணி அமையாவிட்டால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே குறிப்பிட்ட தொகுதிகளை தேர்வு செய்து வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பி விட்டனர் . நாளைக்குள் கூட்டணி உறுதியாகாவிட்டால் பாரதீய ஜனதா வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!
காங்.வேட்பாளர் தேர்வில் இழுபறி njhlh;tjhfTk; .கோஷ்டி பூசல் Kw;wptUtjhfTk; njuptpf;fg;gLfpwJ.
தமிழ்நாட்டில் தி.மு.. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் , முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.. 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 தொகுதியும், முஸ்லிம்லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது .
தி.மு.., விடுதலை சிறுத்தை, முஸ்லிம்லீக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. காங்கிர சில் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதலாக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கடந்த முறை வெற்றி பெற்ற 10 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கூடுதலாக 6 வேட்பாளர் பட்டியலை தமிழக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு தயார் செய்தது. 16 பேர் பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத்தின் ஒப்புதலுக்கு கொடுத்தனர்.
தமிழக விவகாரங்களை கவனிக்கும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் அகமது படேல், குலாம்நபி ஆசாத் ஆகியோர் அதை பரிசீலித்து சோனியா ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். அந்த பட்டியலை சோனியா நிகராகரித்து விட்டதாகவும், ஏற்கனவே போட்டியிட்ட 10 பேர் தவிர புதிதாக சேர்க்கப்பட்ட 6 தொகுதிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது .
இதையடுத்து தமிழக காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டனர். அவர்கள் புதிய பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டியலில் இடம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
சிவகங்கை.சிதம்பரம்
ஆரணிஎம்.கிருஷ்ணசாமி
கோவைபிரபு
சேலம்தங்கபாலு
ஈரோடு.வி.கே. எஸ்.இளங்கோவன்
தேனிஜே.எம்.ஆரூண்
மயிலாடுதுறைமணிசங்கர் அய்யர்
திண்டுக்கல்என்.எஸ்.வி.சித்தன்
விருதுநகர்சுந்தர்ராஜ்
திருச்சிசுப.சோமு
நெல்லைமுன்னாள் எம்.எல்.. ராமசுப்பு, கீழப்பாவூர் சேர்மன் எஸ்.கே .டி.பி. காமராஜ், முன்னாள் எம்.பி. முருகையாவின் மனைவி ராஜேஸ்வரி ஆகிய 3 பேரில் ஒருவர்.
கடலூர்பி.ஆர்.எஸ். வெங்கடேசன் அல்லது நெடுஞ்செழியன்.
தென்காசிமாதவராஜ், மோகன் (முன்னாள் மந்திரி அருணாசலம் மகன்) ராஜேந்திரன் (ஓய்வு பெற்ற .பி. எஸ்.அதிகாரி) ஆகியோரில் ஒருவர்.
காஞ்சீபுரம்ஸ்டேட் பாங்கி தலைவர் விசுவநாதன்.
இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், திருச்சி, கடலூர், காஞ்சீபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவுகிறது.
திருச்சிக்கு முதலில் சுப.சோமு பெயர் இருந்தது. அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஜெரோம் ஆரோக்கியராஜ், பட்டுக்கோட்டை ராஜேந்திரன், ராஜேஸ்வரி முருகையா ஆகியோரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் தனுஷ்கோடி ஆதித்தன் தனக்கு பதில் மகளுக்கு சீட் கேட்டு வருகிறார் . ஆனாலும் ராமசுப்பு, எஸ்.கே.டி.பி.காமராஜ் ஆகியோரது பெயர்கள் மட்டுமே பரிசீலனையில் உள்ளது.
காஞ்சீபுரம் தொகுதியை யசோதா கேட்டிருந்தார். அவருக்கு பதில் ஸ்டேட் பாங்கி இயக்குனர் விஸ்வநாதன் பெயர் இடம் பெற்றுள்ளது.
வசந்தகுமார் எம்.எல்.. தனக்கு நெல்லை தொகுதி வேண்டும் என்று கேட்டார் . ஆனால் தற்போது எம்.எல்.. பதவியில் இருப்பவர்களுக்கு சீட் இல்லை என்று சோனியா முடிவு செய்து இருப்பதால் அவருக்கு நெல்லை தொகுதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுவையில் மத்திய மந்திரி நாராயணசாமி போட்டியிடுகிறார்.
நாளை டெல்லியில் அகமது படேல், குலாம்நபி ஆசாத் ஆகியோர் புதிய வேட்பாளர் பட்டியலை பரிசீலித்து முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு சோனியா பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் வேட்பாளர்களை இறுதி செய்து ஒப்புதல் அளிப்பார். எனவே புதன்கிழமை தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே வேட்பாளர் பட்டியலை நேர்காணல் நடத்தாமல் தயாரித்து மேலிட சிபாரிசுக்கு அனுப்பி இருப்பதாக காங்கிரஸ் நிர் வாகிகள் புகார் தெரிவித் துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் முன் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் அலுவலக கதவை இழுத்து மூடி போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு வெளி மாநில நிர்வாகிகள் முன் அனுமதி இன்றி கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
பாராளுமன்றத்துக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதில் 1715 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இவர்களில் 222 பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். இந்த தகவலை தேசிய தேர்தல் கண்காணிப்பு ஜனநாயக சீரமைப்பு குழு தெரிவித்துள்ளது.
இவர்களில் காங்கிரஸ் கட்சி முதலிடம் வகிக்கிறது. போட்டியிடும் 93 வேட்பாளர்கள் 24 பேர் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். இதற்கு அடுத் தப்படியாக 2-வது இடத்தை பா.ஜனதா பிடித்துள்ளது. இதில் போட்டியிடும் 79 வேட்பாளர்களில் 23 பேர் கிரிமினல்கள் .
மேலும், பகுஜன் சமாஜ் கட்சியில் 17 பேரும், சமாஜ்வாடி கட்சியில் 10 பேரும், அடங்குவர் . மாநிலங்களை பொறுத்தவரை பீகாரில்தான் அதிகபட்சம் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி பீகாரில் 51 பேரும், உத்தரபிரசேத்தில் 46 பேரும், மராட்டியத்தில் 42 பேரும், ஆந்திராவில் 34 பேரும் கிரிமினல் வழக்குகளில் உள்ளவர்கள்.
முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுபவர்களில் 193 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் ஆவர். இவர்களில் காங்கிரஸ் கட்சியில் 45 பேரும், பா.ஜனதாவில் 30 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் 23 பேரும், சுயேச்சை வேட்பாளர்களில் 22 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

கோடீஸ்வர வேட்பாளர்களில் மாநில அளவில் ஆந்திரபிரதேசம் தான் முதலிடம் வகிக்கிறது. இங்கு 64 பேரும், உத்தரபிரதேசத்தில் 35 பேரும், மராட்டியத்தில் 29 பேரும், பீகாரில் 23 பேரும் கோடீஸ்வர வேட்பாளர்கள்.
இதற்கிடையே, வருமான வரி செலுத்தாத வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் 1715 வேட்பாளர்களில் 979 பேர் வருமானவரி கட்டாதவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் பழங்குடி தலைவர்கள் 3 பேர் மர்ம மனிதர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர். இதனால் அங்கு இரு தரப்பினருக்கு இடையே கலவரம் மூண்டது. கடை, வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
கலவரத்தில் 11 பேர் கொலை செய்யப்பட்டனர். அதில் 6 பேர் மார்கட் என்ற இடத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். இந்த 6 பேரையும் நாங்கள்தான் கொன்றோம் என்று பலுசிஸ்தான் விடுதலைப் படை என்ற அமைப்பு கூறி உள்ளது. இதேபோல மற்ற இடங்களில் 4 பேர் பிணமாக கிடந்தனர்.
குஸ்தார் என்ற இடத்தில் குண்டு வெடித்தது. இதில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார் .
லோத்தி என்ற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது ராக்கெட் குண்டுகளை வீசினார்கள் . இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்குள்ள ரெயில்வே தண்ட வாளமும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
இதற்கிடையே 3 தலைவர்களும் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
தாய்லாந்திலே நடைபெறுவதாக இருந்த தென் கிழக்கு ஆசிய நாடுகளுடைய ஆசியான் கூட்டமைப்பின் தலைவர்களுடைய மேனிலை மாநாடு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
கடற்கரை சுற்றுலா நகரமான பத்தாயாவில் மாநாடு நடக்கவிருந்த அரங்கத்தை அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாகக முற்றுகையிட்டதை அடுத்து மாநாடு ரத்தானது.
தாய்லாந்து பிரதமர் அபிஸித் விஜெஜீவா அந்த வட்டாரத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்திருந்தார்.
ஆஸியான் நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டு மண்டபத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை அடுத்து அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தவறியது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்துவருவதாக அரசாங்கம் சார்பாகப் பேசவல்லவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார் .
தற்போதையப் பிரதமர் அபிஸித் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று கோரி பதவியகற்றப்பட்ட தலைவர் தக்ஷின் ஷினாவத்ரவின் ஆதரவாளர்களான ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
தற்போதைய அரசாங்கம் தக்ஷினுக்கு எதிரானது என்று கருதப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!
வடகொரியா ராக்கெட் ஏவி பரிசோதனை செய்துள்ள நிலையில் அந்நாட்டின் மீது புதிய தண்டனைத் தடைகளைக் கொண்டுவர வேண்டும் என்று அழுத்தம் தருவதற்கான ஏற்பாடுகளில் ஜப்பான் ஈடுபட்டுவருவதாக அந்நாட்டிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியா பரிசோதித்தது நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை என்று பரவலாகக் கருதப்படுகிறது.
வடகொரிய அராங்கத்துக்கு எதிராக .நா.மன்ற பாதுகாப்பு சபை கடுமையான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஜப்பான் ஆரம்பத்தில் வலியுறுத்தியிருந்தது. ஆனால் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் அப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கவில்லை .
ஆனால் தற்போது, வடகொரியாவுக்கு எதிராக சீனா வரைந்துள்ள கடுமை குறைவான ஒரு தீர்மானத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் ஆதரவு தரத் தயாராக இருப்பதாக அநாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது.
சீனாவின் இந்த வரைவு அறிக்கைக்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!
ரஷ்யாவின் இராணுவத்தில் ஆயிரக்கணக்கான பணி வெட்டுக்களுக்கு வழி செய்யும் சீரமைப்புக்கு எதிராக ரஷ்ய முன்னாள் இராணுவத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர்களும், விளாடிவொஸ்டொக் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்த சீரமைப்புக்கள், ரஷ்ய இராணுவத்தை மேலும் செயற்திறன் உள்ளதாகவும், நவீனமானதாகவும், தொழில்சார் நிபுணத்துவம் நிறைந்ததாகவும் மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்த மறுசீரமைப்பால், விளாடிவொஸ்டொக் பகுதியில் மூவாயிரம் கடற்படையினரும், 800 இராணுவத்தினரும், மற்றும் 20 வீதமான இராணுவ மருத்துவர்களும் தமது பணிகளை இழப்பார்கள் என்று ஒரு ஆர்ப்பாட்டக்காரரான, ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் போரிஸ் பிரிக்கொட்கோ கூறியுள்ளார
!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும், அமெரிக்கர் ஒருவரை பணயமாக பிடித்து வைத்துள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான இழுபறிகள் தொடருகின்ற நிலையில், ஏடன் வளைகுடாவில் மேலும் இரு சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
16 அமெரிக்க சிப்பந்திகளுடனான அமெரிக்க இழுவைப் படகு ஒன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக மரிடைம் அமைப்பு கூறுகின்றது.
பிறிதொரு சம்பவத்தில், கடற்கொள்ளையர்கள், இருபத்தாறாயிரம் தொன்கள் எடையுள்ள கடற்கலன் ஒன்றின் மீது சுட்டதாக கூறப்படுகின்றது.
அந்த கப்பலின் தலைமை மாலுமியின் அறையை நோக்கி அவர்கள் கைக்குண்டை ஏவியதாகவும் , ஆனாலும், அது வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கப்பல் சிப்பந்திகள் கடற்கொள்ளையர்களை தண்ணீர் குழாய்கள் மூலம் தாக்கியதாகவும் கூறப்படுகிறத
!!!!!!!!!!!!!!!!!
சீனாவில் தேசிய மருத்துவ செலவின காப்பீட்டுத் திட்டம் ஒன்றை விவசாயிகளுக்காக சீன அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் புதிய மருத்துவமனைகளும் சிகிச்சை மையங்களும் கட்டப்பட்டுவருகின்றன.
கிராமப்புறங்களில் வாழ்வோர் உடல்நலத்துடன் திகழ்வது மற்றும்மின்றி அவர்கள் ஏழ்மையில் உழல்வதைத் தடுப்பதும் இவற்றின் நோக்கம்.
சீன கிராம மக்கள் உழைத்து சிறுகச் சிறுக சேமித்துவைத்துள்ள பணத்தைக்கொண்டுதான் மருத்துவமனை சேவைகளுக்கான கட்டணத்தை வேண்டும் என்ற நிலைமை இதுநாள்வரை இருந்துவந்தது. ஆதலால் குடும்பத்தில் ஒருவருக்கு பெரிய நோய் வருகிறது என்றால் அந்தக் குடும்பமே வறுமைக்குள் மூழ்கிப்போய்விடும் அபாயம் இருந்துவந்தது.
!!!!!!!!!!!!!!!!!
சிறியவர்கள் மட்டுமல்ல.. பெரியவர்களும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் பயன் ஏதும் உண்டா? என்று வடக்கு கம்பீரியா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தியது . அதில் வியக்க வைக்கும் தகவல்கள் கிரைடத்துள்ளன.
இப்பல்கலைக்கழகத்தில் மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மையம் உள்ளது. இதன் தலைமை பேராசிரியர் டேவிட் கென்னடி தலைமையிலான குழுவினர் சாக்லேட் சாப்பிடும் 1000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
சாக்லேட்டில் உள்ள கோகோ மற்றும் இதர சத்துப் பொருட்கள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றனவாம்.
இதனால் எவ்வளவு பெரிய கணக்குகளையும் எளிதில் செய்து முடிக்கும் நுண்ணறிவு ஏற்படுகிறது . நூதன ஐடியாக்களும் தோன்றுகின்றன.
எனவே கணக்கில் புலியாக வேண்டுமானால் சாக்லேட் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . கம்ப்யூட்டர்களில் வேலை செய்பவர்களும் சாக்லேட் சாப்பிடுவது நல்லதாம்.
!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.