பாதுகாப்பு வலயத்தினுள் பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பாலித கோகன்னவிடம் அமெரிக்கா அறிவுறுத்தல்

அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரிச்சட் பவுச்சரினால், தற்போது வாசிங்டன் சென்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மோதல்களில் சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்தை  மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவிற்கும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க பிரதிச் செயலர் ரிச்சட் பவுச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வாசிங்டனில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து பொது மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என ரிச்சட் பவுச்சரினால், பாலித்த கோகன்னவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திடமே இருப்பதாகவும் ரிச்சட் பவுச்சர் வலியுறுத்தியுள்ளார்.மோதல் தவிர்ப்பு பிரதேசத்தினை படையினர் சுற்றி வலைத்துள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இராணுவத்தினர் தாக்குதல்களை முன்னெடுக்கும் பட்சத்தில், அங்குள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்ற கருத்து நிலவியது.

எனினும் இது தொடர்பில் அமெரிக்காவிடம் நியாயம் கற்பிக்கும் பொருட்டே வெளிவிவகார அமைச்சர் பாலித்த கோகன்ன அமெரிக்கா சென்று நேற்று ரிச்சட் பவுச்சரை சந்தித்துள்ளதாக கருதப்படுகிறது.

எனினும், பொது மக்கள் பாதிக்கப்படாதவாறு, இலங்கை அரசாங்கம் மோதல் நடவடிக்கைகளை நிறுத்தி, யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ரிச்சட் பவுச்சர் இதன் போது வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, இணைத்தலைமை நாடுகளுடன், தொலைபேசியில் கலந்துரையாடி, யுத்த நிறுத்தம் குறிதது வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.