மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படை மீது புலிகள் தாக்குதல்: ஒரு வீரர் பலி; மூவர் காயம்.

மட்டக்களப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மினி முகாம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி – பதுளை வீதியில் கோப்பாவெளிக்கும் புல்லுமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா விசேட அதிரடிப் படையினரின் மினி முகாம் ஒன்றின் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 08 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் ஒரு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.