போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என்ற பிரித்தானிய பிரதிநிதியின் கருத்துக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

விரைவில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதி டெஸ் பிறவுண் வெளியிட்டுள்ள கருத்து குறித்து அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.


இவ்வாறான உறுதி மொழிகளின் மூலம் இலங்கையின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தேவையில்லாமல் தலையீடு செய்வதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் ஊடக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரித்தானியாவிடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போது டெஸ் பிறவுண் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு கனேடிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையையும் இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.