‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (10.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னியில் தீவிரமடைந்திருக்கும் போரையடுத்து உருவாகியுள்ள தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேசுவதற்கு புதுடிலில்லி வருமாறு இந்திய அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது .
தற்போதைய சூழ்நிலையில் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் இந்தியா சென்றிருப்பதால் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடு சென்றிருப்பதால் பத்து உறுப்பினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 15, 16 ஆம் நாட்களில் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்திருக்கின்றது.
புதுடில்லி விடுத்துள்ள இந்த அழைப்புத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறிய மாவை சேனாதிராஜா, இது தொடர்பாக அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டார்.

போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையுடன் இந்தியா எதனையும் செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினர் .

தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்ற போதிலும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா ஆக்கபூர்வமான எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழ்நாட்டின் உணர்வுகளையும் மத்திய அரசாங்கம் மதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

‘பாதுகாப்பு வலயம்எனக் குறிப்பிடப்படும் சிறிய பகுதிக்குள் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் அடக்கப்பட்டுள்ள நிலையில் கூட அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தி பெருமளவு இழப்புக்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த நிலையில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதுதான் இந்தியாவின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளுமாக இருந்தால் இவ்வாறான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஆனால் தற்போதைய நிலையில் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது என்பது வ்னியில் இன்று உருவாகியுள்ள நிலைமைகளையிட்டு அனைத்துலகத்தில் உருவாகியிருக்கும் அக்கறையைத் திசை திருப்புவதாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யுத்த வலயத்தில் சிக்கி பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் இணைத் தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியுள்ள 100,000 த்திற்கும் மேற்பட்ட சிவிலியன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மோதல் தவிர்ப்பு வலயங்கள் மீது நடத்தப்படும் எறிகணைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அமெரிக்க உள்ளிட்ட இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபர்ட் வூட்ஸ் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான மோதல் தவிர்ப்பு அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், சிவிலியன்களுக்கு தேவையான போதியளவு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் எனவும் இணைத் தலைமை நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்காவின் பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரினால் இணைத் தலைமை நாடுகளுடனான இந்த விசேட கூட்டம் நேற்றைய தினம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வடக்கில் இடம்பெற்று வரும் யுத்தம் பாரிய இரத்த வெள்ளத்தை உருவாக்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்திருந்த எச்சரிக்கையைத் தொடர்ந்த இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்நகர தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டுமென ரிச்சர்ட் பௌச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோதல்களில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் மோதல் தவிர்ப்பு வலயத்திற்கு உரிய மதிப்பளித்து செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அப்பாவிச் சிவிலியன்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித கொஹணே வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாகவும் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பாகவும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் றிச்சர்ட் பெளச்சருக்கும் இடையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்நாள் புதன்கிழமை சந்திப்பு நடைபெற்றது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளேக் தொலைக்காணொலி உரையாடல் (Video conferencing) ஊடாக இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

தமிழர் தாயகத்தில் உள்ள தமது உறவுகள் தொடர்பாக அமெரிக்க தமிழர்கள் கொண்டுள்ள அதிகரித்த உணர்வுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட றிச்சர்ட் பெளச்சர், நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கான தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இப்பேச்சுக்களின் போது வன்னியில் உருவாகியுள்ள மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக் உரையாடிய அதேவேளையில், அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பாக பெளச்சர் உரையாடினார்.

வன்னியில் உள்ள மக்களுக்காக அமெரிக்காவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டும் உதவிகள் தொடர்பாக அமெரிக்க தூதுவர் முதலில் விளக்கிக்கூறினார். இங்குள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தில் 60 வீதமானவை உலக உணவுத் திட்டத்தின் மூலமாகவே வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், காயமடைந்த 4 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதேவேளையில் மருந்துப் பொருட்களை அனுப்பிவைப்பதில் காணப்படும் நெருக்கடிகள் தொடர்பாகவும் அவர் விளக்கினார்.

பாதுகாப்பு வலயத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இருப்பதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய தமிழ்ப் பிரதிநிதிகள், இந்தப் பகுதிக்கு மருந்துப் பொருட்களை நேரடியாக அனுப்பிவைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்க அரசாங்கம் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமெரிக்க தமிழர்கள், கண்ணிவெடிகளை அகற்றுவதில் அதிகளவு அக்கறை காட்டும் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு மீள்குடியேற்றத்தைத் தாமதப்படுத்தும் அதேவேளையில் அந்தப் பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக சிறிலங்கா அரசாங்கம் மாற்றுவதற்கும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும் வழிவகுத்துவிடலாம் எனவும் எச்சரித்தனர்.

உடனடி போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழர்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இருந்து தமிழர்கள் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிப்பார்களா என அமெரிக்க தூதுவர் கேட்டுக்கொண்ட போது பதிலளித்த தமிழ்ப் பிரதிநிதிகள், இது தொடர்பாக அங்குள்ள தமிழர்களே முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்தி .நா. அமைப்புக்களின் பாதுகாப்புடன்போரற்ற பிரதேசம்ஒன்றை உருவாக்கி அங்கு மக்களை இருக்க விட்ட பின்னரே, தமிழர்களிடம் விடுதலைப் புலிகளுடன் இருக்கப்போகின்றார்களா அல்லது அல்லது அரசங்க முகாம்களுக்குள் செல்லப்போகின்றார்களா என்பதைக் கேட்க வேண்டும் எனத் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்னர்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு அரசியல் தீர்வு ஒன்றின் அவசியம் தொடர்பாக றிச்சர்ட் பெளச்சர் வலியுறுத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்குபற்றுதல் இல்லாமல் எந்தவொரு நிரந்தரமான தீர்வையும் எட்டிவிட முடியாது எனத் தெரிவித்த தமிழ்ப் பிரதிநிதிகள் , ‘முழுமையான பிரிவினைஎன்பதும் ஒரு தீர்வாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு கூட்டாட்சி முறை ஒரு மாற்றுத் திட்டமாக அமையலாம் எனவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறான ஒரு அரசியல் தீர்வு தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், இவ்வாறான அரசியல் தீர்வு முயற்சிகளில் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு, தங்களால் ஆபத்து இருப்பதாக வெளியான தகவலை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.

முன்னதாக, விடுதலைப்புலிகளால், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது . இதனையடுத்து, சோனியாகாந்திக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியாகாந்தி மற்றும் அவரது குழந்தைகளுக்கும், தங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையை திசை திருப்பும் வகையிலும், இதுபோன்ற தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் , தங்களது இயக்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணத்தில், இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அப்பாவிச் சிவிலியன்கள் மீதான எறிகணைத் தாக்குதல்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுமார் 100,000 சிவிலியன்கள் சிக்கியிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை விரைந்து செயற்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது .

அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் விசேட பிரதிநிதியொருவரை ஐக்கிய நாடுகள் அமைப்பு அனுப்பி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள மோதல் தவிர்ப்பு வலயம் உலகின் மிக ஆபத்தான பிரதேசங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் உயிரிழப்புக்களை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த குற்றச் செயல்களை புரிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!
பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருப்பவர்களில் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கு எதிர்வரும் புதன்கிழைமை அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவதர்சன் சிவகுமாரவேல், 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்லரன் ஆகிய இளைஞர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முதல் இந்த போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.
கடும் குளிருக்கு மத்தியிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் இவர்கள் இருவரும் தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை உண்ணாநிலைப் போராட்ட மேடைக்கு வந்த மைக் டொனால்ட் என்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர், உண்ணாநிலை போராட்டத்தில் இருப்பவர்களில் ஒருவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்திற்கு அவரை அழைத்துச் சென்று வன்னியில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து ஆராய பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எழுத்து படிவவமும் பயண விவரமும் இன்று பிற்பகல் தொடர்புபட்ட தரப்புக்களிடம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
சந்திப்பில் ஏழு உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இலங்கை பிரச்சினை குறித்து சிவதர்சன் சிவகுமாருடன் கலந்துரையாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் உண்ணாநிலைப் போராட்டம் இருக்கும் இருவரையும் பானம் அருந்தியவாறு உண்ணாநிலைப் போராட்டத்தை தொடருமாறும் பிரித்தானிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
இந்த வேண்டுகோளை மேற்படி இருவரும் ஏற்று பானம் அருந்தியவாறு தொடர்ந்தும் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்
!!!!!!!!!!!!!!!!!!!!
பிரான்சில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்விலும் நால்வர் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியிருக்கின்றனர் .

பிரான்சின் இன்வலிட் பகுதியில் கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வானது நேற்று முன்நாள் புதன்கிழமை முதல் ஈபிள் கோபுர வளாகத்தில் உள்ள மனித உரிமைகள் சதுக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன், அங்கு நடைபெறும் இப்போராட்டத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
அதேநேரம் பரிஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றத
பிரான்சில் நடைபெறும் இந்த போராட்டங்களில் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் நால்வர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஈபிள் கோபுர வளாகத்தில் ரவிராஜ் ஆனந்தகுமாரசாமி, வர்ணன் விக்கினேஸ்வரன் ஆகிய இருவரே சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
– விடுதலைப் புலிகளை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும
– வணங்கா மண் பயணத்திற்கான அனுமதியை வழங்க வேண்டும
போன்ற கோரிக்கைகளை பிரான்ஸ் அரசாங்கத்திடம் முன்வைத்து இவர்கள் தமது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதேவேளையில் பரிஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் நேற்று தொடக்கம் மேலும் இருவர் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
நவநீதம் சண்முகராஜா, செல்வகுமார் அல்பேட் ஆகியோரே இங்கு உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதேநேரம் அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் நடத்தப்படும் இப்போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி எழுச்சி முழக்கங்களை முழங்கிப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதுடன் , தமது போராட்டம் காலவரையறை இல்லாமல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
காலத்தின் தேவையை உணர்ந்து அனைத்து மக்களையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உலகமே இந்த யுத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்துகையில் அரசாங்கம் மௌனம் காப்பதோடு மக்களை மீட்பதற்கு இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கின்றது.

இவ்வாறான இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட அழிவை விட பாரிய மனித அவலம் ஏற்படும். எனவே அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலர் சமல் ஜயநித்தி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென உலகமே அழுத்தம் கொடுக்கின்ற போதும் அரசாங்கம் காது கேளாதது போல இருப்பது பாரிய இரத்தக் களரியையே ஏற்படுத்தும். எனவே வன்னியிலிருக்கும் இராணுவத்தை முகாம்களில் முடக்கி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும்.

வன்னியில் தமது சொந்த இடங்களிலேயே மக்கள் வாழ்கின்றனர். விடுதலைப் புலிகளோடு இரண்டு இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். எனவே அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதென்பது மனிதாபிமான நடவடிக்கை அல்ல.

அத்தோடு இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும். தத்தமது சொந்த இடங்களில் வாழும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இப்பிரச்சினை தொடரத்தான் செய்யும்.
உலகின் யுத்த நிறுத்த வலியுறுத்தலை வரவேற்கின்றோம். இது தொடர வேண்டும். சர்வதேசம் தமிழ் மக்களை பாதுகாக்க முன்வர வேண்டுமென்றும் சமல் ஜயநித்தி தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் மனிதாபிமான சூழ்நிலை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் பாதுகாப்ப இடம்நகர்த்தப்பட வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

மோதல்கள் உக்கிரமடைந்து செல்லும் இந்தத் தருவாயில் அப்பாவிச் சிவிலியன்களது நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள நியூ யோர்க் நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இலங்கை அரச படையினரால் அப்பாவிச் சிவிலியன்கள் கொல்லப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒபாமா அரசாங்கம் இலங்கை நிலவரம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உணவுஇ குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்று வரும் யுத்தத்தை தடுத்து நிறுத்தி சிவிலியன்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் லாரன்ஸ் கெனொன் தெரிவித்துள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களது நிலைமை குறித்து கனேடிய அரசாங்கம் அதிக கரிசனை கொண்டுள்ளதாகவும் , சிவிலியன்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவிலியன்களை சுதந்திரமாக இடம் நகர அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .

புலிக்கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை குறித்து கனடாவிற்கான இலங்கைத் தூதுவராலயம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எனினும், கனடா ஓர் ஜனநாயக நாடு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதற்கு அவர்களுக்கு பூரண சுதந்திரம் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமான கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒட்டோவாவில் அண்மையில் இலங்கைத் தமிழர்களினால் நடத்தபபட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத் தூதுவர் தயா பெரேரா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு விசேட பிரதிநிதியொருவரை நியமிக்க வேண்டுமென கனேடிய லிபரல் கட்சியின் தலைவர் மைக்கல் இக்னடிப் தெரிவித்துள்ளார்.

யுத்தம் தொடரத் தொடர மனிதாபிமானப் பேரவலம் மேலும் மோசமடையக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த கனேடிய அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு பேலியகொட பகுதியிருந்து மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியிலுள்ள சின்னம்மாவின் வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரின் பெற்றோர் களுவாஞ்சிக்குடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தள்ளனர்.

கடந்த 26ம் திகதி கொழும்பு பேலியகொட நுகே வீதியில் வசிக்கும் அருட்பிரகாசம் புவித்திரன் என்வரே களுவாஞ்சிக்குடியில் சின்னம்மாவின் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் 29ம் திகதி கொழும்புக்கு செல்வதாக திரும்பியவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக இமம்மாதம் 1ம் திகதி களுவாஞ்சிக்குடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரையில் தெரியவரவில்லை. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!

இலங்கை சனத்தொகையில் 15 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும் 10 வீதமானவர்கள் நோய் ஏற்படக்கூடிய இறுதி நிலையில் இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கை சனத் தொகையில் 4 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை நீரிழிவு நோய்க்கான சிகிச்சை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வழங்கியுள்ளார். உலக சுகாதார அமைப்பு இதற்காக 76 மில்லியன் ரூபாவை வழங்க இணங்கியுள்ளது

!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!

இலங்கைக்கு இந்திய அரசு வழங்கியுள்ள ஆயுதங்களைத் திரும்பப் பெறவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சில அமைச்சர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. ஏற்கெனவே இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வன்னியில் இடம் பெற்ற மோதலில் படுகாயமடைந்த படையினர் பெங்களுருக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!
எந்த அணியில் இருந்தாலும் ஈழத் தமிழருக்காக உண்மையாகவும், உறுதியாகவும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் .

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீதான கொலைவெறி தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரியும் , அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு திருமாவளவன் பேசியதாவது :

இலங்கையில் சிங்களப் படையினரின் விஷவாயு குண்டுகள் தாக்குதல் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று, நேற்று அதிகாலையில் செய்தி கேட்டு கலங்கினேன். பிரபாகரனுக்கு பாதிப்பு என்றால், அதன் பின்னர் திருமாவளவன் வெற்றிப் பெற்றால் என்ன, வெற்றி பெறாவிட்டால் என்ன? தேர்தலில் வெற்றிப்பெற்று டெல்லி சென்றால் என்ன, செல்லாவிட்டால் என்ன? எந்த இனத்தை காப்பதற்காக நாடாளுமன்றம் செல்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோமோ, அந்த இனமே அழிந்துவிட்டால் அதன் பின்னர் டெல்லி சென்று என்ன பயன்?. இதனால், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதையே தவிர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இதுதொடர்பான நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பையும் ரத்து செய்ய நினைத்தேன்.

ஆனால்அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்என்று ரவிக்குமார் எம்எல்ஏ, கெஞ்சினார். அதன் பின்னரே, எனது முடிவை மாற்றினேன். பின்னர், நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினோம். அப்போதும், ‘இலங்கைத் தமிழரின் கடைசி நம்பிக்கை நீங்கள் தான்என்று முதல்வரிடம் சொன்னேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஓர் மாவீரன் என்று முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியே பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட இலங்கை தமிழருக்காகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடி வருகிறது.

ஆனால், தா.பாண்டியன் போன்றவர்கள், தாசில்தாராக மாறி எனக்கு சாதி சான்றிதழ் தரவேண்டிய அவசியமில்லை. எனக்கு சான்றிதழ் தரும் தகுதி மக்களை தவிர, யாருக்கும் கிடையாது. சர்க்கஸில் நடிப்பவர் அவர் தான்; நான் அல்ல . என்னைப் பற்றி பிரபாகரன் நன்கு அறிவார். தா. பாண்டியன் மீது நாங்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் அல்லது யாரோயோ திருப்திப்படுத்துவதற்காக தா.பாண்டியன் இவ்வாறு பேசியுள்ளார் .

இலங்கை தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து ஓர் தனி அணி அமைத்து, அதில் சேரும்படி என்னை அழைத்து நான் மறுத்திருந்தால் என் மீது குற்றம் சொல்லுங்கள். ஆனால் இப்போது அந்த அருகதை யாருக்கும் இல்லை.

இலங்கை தமிழர் பாதுக்காப்பு இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்த பின்னர் தான் அந்த இயக்கத்துக்கே ஓர் மரியாதை கிடைத்தது, இல்லையெனில், அது ஓர் அதிமுகவின் பினாமி அமைப்பாகத்தான் இருந்திருக்கும்.

திமுக கூட்டணியில் இருந்தபோதும், இலங்கை தமிழர் பிரச்சனைக்காக, திமுகவுக்கு எதிரான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டேன், அதனால், முதல்வர் கருணாநிதிக்கு சங்கடம் நேர்ந்தபோது, நான் கூட்டணியில் இருக்கிறேனா, இல்லையா என்பதே நீங்களே முடிவு செய்யுங்கள் என்று முதல்வரிடம் கூறினேன். என்றாலும், ‘விடுதலைச் சிறுத்தைகளுடனான கூட்டணி, தேர்தல் கூட்டணி அல்ல; அது ஓர் கொள்கை கூட்டணிஎன்று அவர் அறிவித்த பின்னர் தான் தொடர்ந்து அதிலேயே நீடிப்பது என நாங்கள் முடிவு செய்து பணியாற்றி வருகிறோம். இல்லையெனில், இந்த தேர்தலை தனித்தே சந்தித்திருப்போம்.

எந்த அணியில் இருந்தாலும் இலங்கை தமிழருக்காக உண்மையாகவும், உறுதியாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடும். இலங்கை தமிழர்களை பாதுகாக்க, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மனிதாபிமானத்துடனும், தாயுள்ளத்துடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

::::::::::::::!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக இந்தியா புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிக்க, இந்தியா அதிநவீன செயற்கைக்கோள் ஒன்றை தாயாரித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளில், அதிநவீன ராடாரை மூலம், தீவிரவாதிகளின் நடமாட்டத்தையும், ஊடுருவலையும் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . இந்த அதிநவீன செயற்கைக்கோள், எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வரும் 20 ஆம் தேதி ஷ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
!!!!!!!!!!!!!!!!
.தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, வரும் 16 ஆம் தேதி சென்னையில் தேர்‌தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில், .தி.மு .. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், .தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, வரும் 16 ஆம் தேதி சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அன்று மாலை சென்னை தீவுத் திடலில் நடைபெற உள்ள பிரச்சார கூட்டத்தில் .தி.மு.. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஜெயலலிதா அறிமுகம் செய்து வைக்க உள்ளார். இந்த கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பா...நிறுவனர் ராமதாஸ், .தி .மு. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் என்.வரதராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதைத்தொடர்ந்து, வரும் 18 ஆம் தேதி முதல் மே மாதம் 10 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பிரச்சாரம் செய்ய உள்ளார் .
!!!!!!!!!!!
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீது ஒரு துரும்பு விழுந்தாலும், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில், போர்நிறுத்தம் செய்யப்படுவதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், பழ .நெடுமாறன், பா... நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய வைகோ, இலங்கைத் தமிழர்களுக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதை உலக நாடுகள் கண்டித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து சோனியாகாந்தி எந்த கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், இலங்கையில், போராடிக்கொண்டிருக்கும் புலிகள், கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை, அபத்தம் என்றும் அவர் கூறினார். மேலும், பிரபாகரன் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் , தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றும் வைகோ ஆவேசமாக பேசினார். வைகோவின் , இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!
Ck§V Cû\VôiûUdÏ G§WôLl úT£VRôL U§ØL ùTôÕf ùNVXô[o ûYúLô ÁÕ úTôÄ^ôo YZdÏl T§Ü ùNnÕs[]o.
CÕùRôPoTôL ùNuû] úTôÄv Lª`]o WôRô¡ÚxQu ùY°«hÓs[ ùNn§
apy;
CXeûL«p úTW¯®p CÚdÏm DZjRªZoLû[ TôÕLôdLÜm, Ck§V AW£u ÕúWôLjûRd Li¥jÕm CXeûLj RªZo TôÕLôl× CVdLm Nôo©p ùNuû] UôYhP Bh£Vo AÛYXLm AÚ¡p SôWôVQlT ùRÚ®p LiP]d áhPm ×Ru¡ZûU SûPùTt\Õ.
Ad áhPj§p TZ.ùSÓUô\u, Rô.Tôi¥Vu, WôURôv B¡úVôo TeúLt\]o. A§p ûYúLô úTÑmúTôÕ, “®ÓRûXl ×#L°u RûXYo ©WTôLWu ÁÕ JÚ £ß ÕÚm×m TPdáPôÕ. JÚ ÕÚm× ®ÝkRôÛm RªrSôh¥p WjR Bß KÓm. ×#Lû[ ùYpX Ø¥VôÕ. ©WTôLWû] A¯dL Ø¥VôÕ.
Ck§V AWÑ, Wô_ThNûY úTôûW ¨ßjÕf ùNôpX úYiÓm. CpûXùV²p ®û[ÜLs ®TÃRUôL CÚdÏm. Ck§Vô Gu\ úRNm JÚ úRNUôL CÚdLl úTôY§pûX’ Gußm AYo úT£]ôo.
RûP ùNnVlThP ®ÓRûXl×#Ls CVdLjûR ùY°lTûPVôL BR¬jÕm, AYoLÞdÏ BRWÜ úLhÓm Ck§V Cû\VôiûUdÏ G§WôLÜm Ck§V UdLÞdÏ AW£uTôp ùYßlûT HtTÓjÕm YiQØm ùY°lTûPVôLl úT£]ôo.
AY¬u CkRl úTfÑ UdL°u EQof£ûVj çi¥ AWÑdÏ G§Wô] Ït\jûR HtTÓjÕm ®RUôL AûUk§ÚkRÕ.
CÕùRôPoTôL YPdÏ LPtLûW LôYp ¨ûXVj§p ûYúLô ÁÕ 505 (1) (©) Gu\ Ck§Vj RiPû]f NhPl ©¬®u ¸r YZdÏl T§Ü ùNnVlThÓ ®NôWûQ«p Es[Õ Guß Ï±l©PlThÓs[Õ.
ûYúLô ÁÕ YZdÏl T§Ü ùNnVlThÓs[Rôp AYo GkúSWØm ûLÕ ùNnVlTPXôm Guß úTôÄv RLYpLs ùR¬®d¡u\].
HtùL]úY Ck§V Cû\VôiûUdÏ G§WôLl úT£VRôL U§ØL®u Sôg£p NmTj ûLÕ ùNnVlThÓ úR£V TôÕLôl× NhPj§p AûPdLlThÓs[Õ Ï±l©PjRdLÕ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
J¬Nô®p TZeÏ¥«]j RûXYÚm, UpLôu¡¬ NhPlúTWûY Eßl©]ÚUô] úNômSôj UjLôª, UôúYô«vh ¾®WYô§L[ôp ®VôZd¡ZûU ÑhÓd ùLôpXlThPôo.
CYo NmÚRô J¥^ô Lh£«u UôYhPj RûXYWôLÜm CÚkÕYkRôo. TZeÏ«] UdL°Pm ªLÜm ©WTXUô] RûXYo. úNômSôjûRÙm, AYWÕ Uû]®ûVÙm, UôúYô«vh ¾®WYô§Ls Åh¥#ÚkÕ AÚ¡p Es[ Y]l TϧdÏ AûZjÕf ùNu\]o. úRoR#p ¨tTRtÏ G§ol× ùR¬®jÕ AYûWj Rôd¡]o. ©u]o Uû]®«u LiùQ§¬úXúV AYûW ÑhÓd ùLôu\]o.
©u]o Rl©YkR AYÚûPV Uû]®, úTôijp CkR NmTYm ϱjÕ ×Lôo ùNnRôo. úRoRûX ×\dL¦dL Y#Ùßj§ CúRTϧ«p LPkR YôWm Tô_L Esðo RûXYûW UôúYô«vÓLs ÑhÓd ùLôu\]o.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!
பிரிட்டனின் மிக மூத்த பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறை அதிகாரியான பாப் குவிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மிக ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஆவணம் ஒன்றை வெளியிலே தெரிவது மாதிரி அவர் தவறுதலாக கையிலெடுத்து சென்றமை புகைப்படம் எடுக்கப்பட்டதையடுத்து அவர் பதவி விலகினார்.
நேற்று புதன்கிழமை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது அவர் செய்த இந்த பிழையின் விளைவாக, வடமேற்கு இங்கிலாந்தில் பயங்கரவாத சந்தேக நபர்களை பொலிஸார் கண்காணித்துவந்த நடவடிக்கையை அவர்கள் கைவிடவும், திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பாக அவர்கள் அதிரடி சோதனைகளை மேற்கொள்ளவும் நேர்ந்தது.
இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 11 பேர் பாகிஸ்தான் பிரஜைகள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் இருந்த ஒரு பெரிய பயங்கரவாதச் சதித் திட்டத்தினை தாங்கள் ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகவும் இந்தச் சதியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அல்கைதாவினருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் பொலிசார் கூறுகின்றனர்.
!!!!!!!!!!!!!
புதிய அணு எரிபொருள் தயாரிக்கும் ஆலை ஒன்றை இரானிய அதிபர் மஃமுட் அஹமதிநெஜாத் திறந்துவைத்துள்ளார்.
அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தப்படலாம் என்று மேற்கத்தைய நாடுகளால் அச்சம் வெளியிடப்பட்டு வருகின்ற, இரானின் உருவாக்கத்திட்டத்தில் உள்ள பார நீர் அணு ஆலையில் பயன்படுத்துவதற்கான எரிபொருளை இந்த ஆலை தயாரிக்கும்.
இரான் ஒரு அணு ஆயுத சக்தியாக வருவதற்கு வழி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்ற இரானின் யுரேனிய செறிவாக்கல் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாகும் .
யுரேனிய செறிவாக்கலுக்கு பயன்படுத்தப்படும், சென்றிபியூஜ்களின் எண்ணிக்கையை 6000 இல் இருந்து 7000 ஆக அதிகரிக்கப் போவதாக, இரானிய அணு சக்தி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!
சரக்குக் கப்பல் ஒன்றைக் கடத்தி, அதன் கப்டனை பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் பேச்சு நடத்துவதற்காக தாம் எஃப். பி. உளவு நிறுவனத்தின் உதவியை நாடவுள்ளதாக அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.
அந்த கப்பலின் ஏனைய மாலுமிகள் கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டதை அடுத்து, அதன் கப்டன் மாத்திரம் ஒரு படகில் பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க கடற்படையின் நாசகாரிக் கப்பல் ஒன்று அந்தப் பகுதிக்கு இன்று வியாழக்கிழமை சென்றுள்ளது.
அந்த கடற்கொள்ளையர்களின் நிபந்தனை என்ன, அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று தெளிவாகவில்லையாயினும் , அவர்கள் பணயமாக பணம் கேட்கலாம் என்றும், அவர்கள் கப்பலை பிடித்தபோது, நீரில் மூழ்கிய அவர்களது படகுக்காக நட்ட ஈட்டையும் அவர்கள் கேட்கிறார்கள் என்று நம்பப்படுவதாகவும் மரிடைம் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
!!!!!!!!!!!!!!
வடகொரியாவின் தலைவரானகிம் யாங் இல்வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சென்ற வருடம் சந்தேகங்கள் எழுந்திருந்ததன் பின்னர் அவர் முதல் முறையாக பெரிய அளவிலான அரச நிகழ்ச்சி ஒன்றில் தோன்றியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய முதல் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.
போட்டியில்லாத ஒரு தேர்தல் மூலம் இவ்வாண்டில் முன்னதாக தெரிவுசெய்யப்பட்டிருந்த இந்த நாடாளுமன்றம், கிம் யாங் இல் அவர்களை நாட்டின் தலைவராக மூன்றாவது முறையாக வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளது.
நோய்வாய்ப்பட்டிருக்கும் கிம்முக்கு அடுத்தபடியாக தலைவராக யார் வருவார் என்பது குறித்து ஊகங்கள் பரவியுள்ளன.
கம்யூனிஸ நாடான வடகொரியாவின் அரசியல் சாசனம் சீர்திருத்தப்படவுள்ளது என்று ஒரு அறிவிப்பும் வந்துள்ள தருணத்தில் இந்த நாடாளுமன்றக் கூட்டம் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.