தெல்லிப்பளை பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை

வீரகேசரி இணையம் 4/10/2009 1:51:19 PM – வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும் வட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களமும் இணைந்து தெல்லிப்பளை பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை துர்க்கதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் இவ்வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது.

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் உதவியுடன் தேவஸ்தானக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுள்வேத வைத்தியசாலையை யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதரா சேவைகள் பணிப்பாளார் ஆ.கேதீஸ்வரன், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்ததுடன் பெயர் பலகையையும் திறை நீக்கம் செயது வைத்தார்.

இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி செல்வி.சி.சிவராணி சிறப்பு விருந்தினராககக் கலந்து கொண்டார். வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியாக ஆயுர்வேத வைத்திய கலாநிதி செல்வி சண்முகநாதன் டிலானி கடமையாற்றுகின்றார்.

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Your email address will not be published.