விடுதலைப்புலிகள் இனி தலைதூக்க மு‌டியாது : ராஜபக்ஷே பேட்டி

கொழும்பு : விடுதலைப்புலிகள் இனி தலைதூக்க முடியாது என இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேட்டியளித்துள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் போர் முடிவடையும் நிலையில் இருப்பதாக கூரிய ராஜபக்ஷே விடுதலைப்புலிகள் தமிழர்களை மனித கேடையங்களாக‌ பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.


விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்த பிறகு தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்படும் . பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்று வருகிறது . இலங்கை மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்த பிறகு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்று இலங்கையின் வடக்கு பகுதி சீரமைக்கப்படும் . எங்களை யாராலம் அழிக்க முடியாது என இருமாப்புடன் இருந்த விடுதலைப்புலிகள் இனியும் தலைதூக்க முடியாது . இவ்வாறு ராஜபக்‌ஷே கூறினார்.


72 புலிகள் சுட்டுக்கொலை
:

இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகள் 72 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 550 விடுதலைப்புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் ‌தெரிவிக்கின்றன .

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.