மட்டக்களப்பு, காவற்துறை பயிற்சி பணிப்பாளர் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு கல்குடா காவற்துறை பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் எஸ் எல் ஜமால்தீன் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிறு முன்னிரவு 7.30 மணியளவில் மருதமுனை பள்ளிவாசல் தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது வழியில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவரின் சடலம் தற்போது, கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை பயிற்சி கல்லூரியின் பணிப்பாளரான காவல்துறை அத்தியட்சகர் ஒருவர், இன்று இரவு 7:30 நிமிடமளவில் மருதமுனை பகுதியில் வைத்து எம்மால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tanilwin

Leave a Reply

Your email address will not be published.